பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 9 தமிழ் முழக்கம் 9

நல்ல அணிநயமும் நாடும் உவமைகளும் சொல்லின் தொடர்நலமும் சொற்செட்டுங் காட்டுவனோ? காதற் குரங்காரைக் கண்ட குயிலங்கே ஒதும் முறையினுக்கோர் ஒப்புண்டோ? அக்குயில்தான். 50 'கூனி யிருக்குங் கொலுநேர்த்தி தன்னிலுமே வானரர்தம் சாதிக்கு மாந்தர்நிக ரோ'வென்று வஞ்சப் புகழ்ச்சியால் வாரி விடுஞ்சொல்லை நெஞ்சில் நினைத்தாலே நேரும் பெருஞ்சிரிப்பு: வாய்ச்சொல்லை நம்பிவிட்ட வற்றற் சிறுகுரங்கு போய்ச்செய்த சேட்டைகளும் பூரித்துப் பேசியதும் கூறும் அழகைத்தான் கூறுவனோ? ஆற்றல்மிகும் ஏறு வருகைதர இன்குயிலி அவ்வெருதைக் 'காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே பூமியிலே மாடுபோற் பொற்புடையார் யார்?' என்று 60 பாரித் துரைத்துப் பலவும் புகழ்வதுபோற் கூறி யிருப்பதைத்தான் கூறி விரிப்பேனோ? நல்ல ஒளிநல்கும் ஞாயிற்றைப் பாடுகிறான்: "புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயும் சோதி'எனக் காலை எழும்புங் கதிரோனைக் கூறுமுறை மேலைப் புலவரையும் மிஞ்சிவிட்ட தென்பேனோ? நாதத்தில் சேரும் நயத்தை வியந்துரைக்கும் போதத்தை எப்படிநான் போற்றி உரைத்திடுவேன்! 70 என்றுநான் ஏங்கி இருக்கையிலே ஒர்குயில்தான் என்றன் மனக்கவலை ஏகும் படியாகக் குக்குக்கூ குக்குவெனக் கூவி வரல்கண்டேன்;

எக்களிப்பு மீதுர்ந்தெழுந்திருந்தேன் அக்கணமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/21&oldid=571629" இலிருந்து மீள்விக்கப்பட்டது