பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 9 தமிழ் முழக்கம் 9

ஒப்புயர் வில்லாமல் ஓங்குநிலை பெற்றிருந்தோம் செப்புகின்ற சான்றுகளோ எப்பொழுதும் ஈங்குண்டு; காட்டில்வளர் மூங்கிலிடைக் கார்வண்டு போய்த்துளைத்த தோட்டில் நுழைகாற்றுத் தோற்றுவித்த நல்லிசையைக் கேட்டான் மனங்களித்தான் ; நாடோறும் கேட்பதற்கு வேட்டான், எடுத்தான் வெதிரைத் துளைத்தான் குழல்கண்டான்; வாயைக் குவித்திசையை ஊதிப் பழகி இனிதாக்கிப் பாருக் களித்தவன்யார்? வேட்டைக் குதவிவரும் வில்லெடுத்து நாண்தொடுத்துப் பூட்டித் தெfத்தான் புதிய ஒலிகேட்டான்; / % 50 விண்ண் ணெணஇசைத்த ஓசை வியப்பூட்டப் பண்ண் ணிசைக்கும்.யாழ் பண்ணி நமக்களித்தான் வேட்டை யளித்த விலங்கினத்தின் தோலுரித்து மேட்டில் உயர்மரத்தில் வீசி எறிந்துவிட்டான்; காய்ந்தெழுந்த தோலிடத்துக் காற்றால் சிறுகொம்பு தோய்ந்துதோய்ந்தாடுவதால் தோன்றியதோர் பேரோசை அன்றே படைத்தான் அளப்பரிய தோற்கருவி; நன்றாம் இசைக்கருவி நாலுவகை செய்தமைத்தான்; கூவும் குயில்கண்டான் கொக்கரித்துக் கூவிநின்றான் யாவும் இசையாகப் பாயும் நிலையுணர்ந்தான்; 60 பந்தென்றும் கும்மியென்றும் பாய்ந்தாடும் ஊசலென்றும் வந்த விளையாட்டில் மங்கையர்கள் பாடிடுவர்; ஏற்றம் இறைப்பார் இசைக்கின்ற பாட்டோசை, நாற்று நடுவோர்கள் நாவசைக்கும் கூட்டோசை, கொல்லைத் தினையிடிக்கும் கோல்வளையார் பாடுகின்ற வள்ளைப்பாட் டெல்லாம் வளரிசையைக் காட்டாவோ?

ッ சீராதீம் தன்மகவைச் சின்னஒரு தொட்டிலிலிட்

வெதிர் - மூங்கில். வள்ளைப்பாட்டு - உலக்கைப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/25&oldid=571632" இலிருந்து மீள்விக்கப்பட்டது