பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 * தமிழ் முழக்கம் 9

விருத்தமெனும் ஒண்பாவால் புகழைப் பெற்றார்

வேறொருவர் ஈங்கில்லை; கம்பன் பெற்ற பெருத்தபுகழ் பாரறியும்; வண்ண மெல்லாம்

பெருங்களிப்பால் கூத்தாடி நிற்கும் பாட்டுத் திறத்தைஒரு பழமொழியே அளந்து கூறும்;

தென்மொழியான் கம்பன்றன் வீட்டில் கட்டும் சிறுத்தஒரு தறிகூடக் கவிதை யாகச்

செப்புமெனில் புகழ்சொல்ல வல்லார் யாரே? 6

வில்வளைத்துப் பேராற்றல் விளங்கக் காட்டி

மிதிலைதரும் எழிலனங்கை மணந்தான் அண்ணல்: சொல்வளைத்துப் பாவாற்றல் துலங்கக் காட்டிச்

சொல்லரிய புகழணங்கை மணந்தான் கம்பன்: மல்விளைக்குந் தோளுடையான் மருங்கு காணா

அலைமகட்கு மணவனிநூல் சூட்டி நின்றான்; சொல்விளைக்கும் நாவுடையான் மருங்கு காணும்

கலைமகட்குச் சுவையணிநூல் சூட்டி நின்றான். 7

'கற்றறிவு கம்பனுக்குச் சிறிதும் இல்லை

காளிவந்தாள் அவன்நாவில் எழுதி விட்டாள்" பற்றுடையார் இவ்வண்ணம் கட்டி விட்டார்

பகுத்தறிவுக் கொவ்வாத கதையி தாகும்; முற்றுணர்ந்த அறிஞனவன், கலைப்பரப்பில்

மூழ்கிஎழுங் கலைஞனவன், காலங் காணாச் சொற்றமிழிற் கவிஞனவன், நறைப ழுத்த

துறைத்தமிழில் தோய்ந்தெழுந்த புலவன் ஆவன். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/37&oldid=571644" இலிருந்து மீள்விக்கப்பட்டது