உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் உரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின். வான்மழை பெய்யாதாயின் ஆழமும் அகலமும் காணற்கரிய நீர்ப்பரப்பும் உடைய கடலும் கூடத் தனது பரப்புத் தன்மையிற் குன்றும். கடலின் நீர்வளம் கதிரவனால், காற்றால், உயிர்களால், குறைக்கப்படுவதை மீண்டும் நிறைவுபடுத்துவது வான்மழையேயாம். வான்மழையின் துணையினாலேயே ஆழ்கடல் வற்றாமல் இருக்கிறது. 17. 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. சிறந்த விழாவும், பூசனையும் வானோர்க்குக் கிடைக்காது, வான்மழை பெய்யாது வறண்டு விடுமாயின் வானோர்க்குரிய பூசைக்கும் வான்மழையே துணை. 18. 19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். மழை பெய்யாதெனில் மற்றவர்க்கு வழங்கப்பெறும் தானமும், தான் உண்மையில் சிறப்பாக வாழத் தவம் செய்வதும் முறையாக நடைபெறமாட்டா. உதவிசெய்வதற்குரிய பொருள் வளத்தையும் தானம் செய்தலுக்குரிய ஒப்புறுதியையும் வான்மழையே தருகிறது. 19. 20. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. தண்ணிர் இல்லாமல் உலகியல் இல்லை. எல்லாருக்கும் வான்மழையின்றி ஒழுக்கம் இல்லை. ஒழுக்கங்கள் வளர வளமான மழை தேவை. 20, 3. நீத்தார் பெருமை கடவுள் அறிவாக, ஆற்றலாக விளங்கினாலும் வான்மழை வளம் பலவற்றைவையத்தில் படைத்தளித்தாலும் இவற்றின் அருமைப்பாட்டையும் பயன்பாட்டையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இயல்பாகமானுடர்க்கு இல்லை. ஆதலால், நீத்தாராகிய சான்றோர் அறிவுறுத்தியும் தெளிவூட்டியும் வழிநடத்துகின்றனர். ஆதலால், நீத்தார் பெருமை பேசப்படுகிறது. 16 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை