உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் உரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் வான் மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைவு இல்லை. அதனால் பஞ்சமும் பசியும் உலகத்தை வருத்தும். - “விரிநீர் வியனுலகம்” என்றது, தண்ணீர்ப் பரப்பளவில் மிகுந்திருந்தும் பயன்படாத நிலை உணர்த்தப்பட்டது. உப்புநீர் விளைவிக்கப் பயன்படாது. பயன்படாத பொருளும் உதவ இயலாத படையும் இருந்து என்ன பயன்? 13. 14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். மழைவளம் குறையின் உழவர்கள் உழ மாட்டார்கள், உழவு செய்யாமையால் உணவு இல்லை என்பது. 14. 15. கெடுப்பது உம் கெட்டார்க்குச் சர்வாய்மற்று ஆங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. ஒருவரைக் கெடுப்பதும், கெட்டவர்களை மீண்டும் எடுத்து ஆக்கம் தருவதும் மழை. பெருமழை பெய்து கெடுப்பது, பெய்யாமற் கெடுப்பது என்ற இருவகையில் கேடு. பெய்ய வேண்டிய காலத்தில், பெய்யவேண்டிய அளவு பெய்து எடுப்பது நன்மை ஆக்கும் வகை. நன்மை தீமை விகிதம் மழையிலும் தீமையே கூடுதலாக இருக்கின்றது. மழை கெடுத்தாலும் பின் எடுத்து விடும்; கொடுத்து விடும். அதுபோலச் சான்றோர்கள் கெடுதல் செய்யமாட்டார்கள். ஒரோவழி செய்ய நேரிட்டாலும் பின் எடுத்து நிறுத்திவிடுவர். 15. 16. விசும்பின் துளிவிழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. வான் நின்று மழைத்துளி விழாது போனால், பசும்புல் கூடத் தென்படாது. வான் நின்றிழியும் மழைத்துளிகளே மண்ணின்மடியில் புதைந்து மறைந்து கிடக்கும் பசும்புல்லைத் தரைநீக்கி மண்ணிற்கு வெளியே தலை காட்டச் செய்வனவாம். மண்ணின் வளத்திற்கு வான்மழையேதுணை. நிலப்பரப்பின்மீது ஒர் அடி அளவு மேற்பரப்புள்ள மணற்பரப்பே, தாவரங்களைத் தாங்கும் தகுதி உடையது; மழைத்துளிகள் விழாதுபோனால், நிலத்தின்மேற்பரப்பு மணல்புழுதியில் அப்புறப்படுத்தப்படுவதால் புல் முளைக்காது. 16. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 15