உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் உரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. உலகியல் ஒழுக்கமாகிய பற்றுக்களை விட்டு நீங்கியவர்களின் பெருமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்பது நூல்களின் முடிவு. தண்ணிர், மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வருதலே இயற்கை. அதுபோல் அவாக்களில் வீழ்தலே உலகியல் இயற்கை; உலகியல் ஒழுக்கம், இவ்வொழுக்கத்தினின்றும் நீங்குதலே நீத்தல். இங்கு உலகியல் ஒழுக்கம் என்று குறிப்பிடப்பட்டது மற்றவர்க்குத் துன்பம் செய்கின்ற பொதுமை நீங்கிய கடும் தன்னலப் பற்றுகளையாம். 24. 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. துறந்தார் பெருமை அளவிடற்கரியது, மண்ணகத்தில் இறந்தாரை எண்ணிச் சொல்ல முடியாதது போல. 22. 23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. பிறப்பு, வீடு இவற்றின் இயல்புகளை அறிந்து துறவறம் பூண்டவர்களின் பெருமை உலகின்கண் விளங்கித் தோன்றிற்று. இருமை - இன்பம் துன்பம் என்றும் கொள்ளலாம். அறம் பூணுதல் - மற்றவர்களுக்குத் துன்பம் தராது இன்பம் தருதலுக்குரிய துறவற வாழ்க்கை. 23. 24. உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன் எனும் வைப்பிற்கோர் வித்து. அறிவு என்னும் துறட்டியினால் பொறிகளாகிய யானைகளை அடக்கித் தம் நெறியில் நிறுத்திக்காப்பவன் விட்டின்பத்திற்கு வித்து ஆவான். பொறிகளின் இயற்கை தத்தம்வழி வெறிபிடித்த நிலையில் உயிர்களை இழுத்துச் செல்லல். அத்தகு பொறிகளை அறிவால் அடக்கித் தாம் மேற்கொண்டுள்ள நெறியில் நிறுத்தி, தமக்கு உரியவாறு பயன்படுத்துதல், இன்பங்களை விளைத்தற்குரியது. அதனால், வித்துப் போலாம். 24. 25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலும் கரி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 17