உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அருமையான நூல்களை அருமையாக வெளியிடுகின்ற பெருமை நி ைற ந் த உரிமையாளர் உயர்திரு. ஏ. திருநாவுக்கரசு சான்றோர் அவர்களை வணக்கத்துடன் பாராட்டுகிறேன்.

திருவாளர் மூவேந்தர் முத்து அவர்களின் கடுமையான உழைப்பினை எவ்வளவு பாராட்டினாலும் பொருந்துவது ஆகும். இந்நூல் அவருடைய அச்சகத்தில்தான் சிறப்பாக அச்சாகியிருக்கிறது.

உழைப்பினை உறுதியாகக் கொண்டு முன்னேற வேண்டும்', என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக திருவாளர் முத்து திகழ்ந்து வருகின்றார்.

திருவாளர் முத்து அவர்கள் சிறந்த அச்சக உரிமையாளர். முதல் தரமான பதிப்பாளர்களில் முதல் வரிசையில் நிற்பவர். அவர் சிறந்த எழுத்தாளர். நல்ல நூலாசிரியர். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கெல்லாம் சென்று தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். - நெஞ்சம் நிறைந்த மலேசியா' என்னும் பயன்படும் பயண

நூலையும் எழுதியவர்.

தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருந்து அரிய பல சாதனைகள் செய்தவர். தற்போது, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருபவர். உழைப்பால் உயர்ந்த உத்தமர்' என்னும் கரும வீரரின் அடிச்சுவடுகளைப் பின் பற்றி வாழ்க்கையினை அமைத்துக் கொண்டவர். மூவேந்தர் அச்சகமும், பூவழகி பதிப்பகமும் இரண்டு கண்கள் போல் அவரால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

முதுமைப் பருவம் வாராத திருவாளர் முத்து அவர் .களின் உழைப்பினைப் பாராட்டிச் சிறப்பிக்க வேண்டியது என் போன்ற மூத்தவர்களின் கடமையாகும் என்பதற்

.காகவே இவ்வளவும் எழுதுகின்றேன்.

  • ஊக்கம் உயர்வு தரும்', முயற்சி உயற்சி தரும்'