பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

என்பதைச் சுட்டிக் காட்ட பொதுத் தன்மையில் எடுத்துகில் காட்டு ஒன்றினைக் கூறினார்.

ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது தொழில் வளம் என்பதாகும். நல்லபடியாக ஆட்சி நடைபெறவில்லை" என்றால் அந்த நாட்டின் தொழில் நசிந்துவிடும் என்றும், தொழிலாளர்கள் துன்புறுவர் என்றும் கூறினார்.

  • அறு தொழிலோர் நூல் மறப்பர்' என்பது குறட்பாவாகும்.

.ெ த ா ழி ல் க ள் ஆறுவகைப்படும் என்பதற்குப், பரிமேலழகர், ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல். ஈதல், ஏற்றல் என்பவைகளைக் குறிப்பிட்டு இவைகள்தான் ஆறு தொழில்கள் என்று விளக்கம் செய்வது முற்றிலும் தவறானதாகும்.

உலகில் எல்லாக் காலத்திலேயும், எல்லா இடத்தி லேயும் நடைபெறுகின்ற தொழில்கள் அனைத்தையும் ஆறுவகைகளில் பேரறிஞர்கள் அடக்கிக் கூறியிருக்கின் றார்கள். அவைகளாவன. உழவர், வாணிகர், ஆசிரியர்: கம்மியர், கலைஞர், மருத்துவர்.

தொடர்ந்து வருகின்ற அறிவு வளர்ச்சியின் காரண மாக, பல்வேறு வகைகளில் தொழில் முறைகள் வேறுபட்டுத் தோன்றினாலும் அனைத்தும் பெரும்பான்மையான பொதுத்தன்மையில் இந்த ஆறுவகைக்குள் அடங்கும் என்று. அறிதல் வேண்டும்.

எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட்டினருக்கும் எல்லா மக்களுக்கும் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற உண்மை யினை எடுத்துரைத்துச் சிறப்பித்த ஆசிரியரின் பெருஞ் சிறப்பினை உலகறியச் செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் இன்றியமையாக் கடமையாகும். பெரும். கடலில் சிறுதுளி போல் இந்த முன்னுரை அமைந்துள்ளது.

தமிழகத்தில் தலைசிறந்த பதிப்பகமாகத் திகழ்ந்து வருவது, தனிச்சிறப்பு வாய்ந்தது, வானதி பதிப்பகமாகும்.