பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

நன்றிக் கடன்களாகும். இத்தகைய நன்மைகளைச் செய் வதற்கு ஒருகால் தவறினாலும், மற்றவர்கள் தனக்குச் செய்த நன்றியை மறக்கவே கூடாது. குறட்பாவினைச் சிந்திக்க வேண்டும்.

"எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு' இக்குறட்பாவில் செய்ந்நன்றி கொன்ற மகற்கு" உய்வில்லை என்று எரிமேலழகர் கூறுகின்றார். எந்நன்றி கொன்றார்க்கும் என்பதற்கு உரை சொல்லும் பொழுது பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும், உ. ய் வு எண் டு. என்கிறார். பெரிய பாவங்களைக் கூறுகின்றார்.

'பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தி லிருந்து நீங்கும் வாயில் உண்டாம். பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், to £6mils?" கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தபுதலும் முதலிய. பாதகங்களைச் செய்தல்'

மிகவும் கொடுமையான செயல்களான பாபங்களைச் செய்தவர்களும் தப்பித்துக் கொள்ளலாம் என்று உரை ஆசிரியர் குறிப்பிடுவது பொருந்தாக் கூற்றாகும்.

கொடுங்கோன்மை' என்ற அதிகாரத்தில் அமைந் துள்ள பத்தாவது குறட்பா !

'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்' ஆட்சி செய்கின்ற காவலன் நாட்டினைச் செழிப்பாக. வைத்திருக்கவேண்டும் என்பதே இந்தக் குறட்பாவின் திரண்ட கருத்தாகும்.

நல்லபடியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாட்டின் வளமை குன்றிவிடும், என்பதனைச் சுட்டிக் காட்டு வதற்காக, பசுக்கள் பால் தருவது குறைந்துவிடும் என்று கூறினார். அதாவது செழிப்பான நிலைமை கெட்டுவிடும்