உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். (ப-ரை) இறைவன் - இறைவனுடைய, அடி-அடிகளை 1.நினைத்துக் கொண்டிருப்பவர்கள்) பிறவி - இப்பிறவி யாகிய, பெரும் - பெரிய, கடல் - கடலினை, நீந்துவர் . நீந்திக் கடப்பார்கள், சேராதார் - நினைக்காதவர்கள், நீந்தார் - கடக்க மாட்டார்கள்.

(க-ரை) இறைவன் அடிகள் என்னும் தெப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.

2. வான் சிறப்பு

(மழையினது அருமை, பெருமை, பயன் முதலியன)

1. வான்கின்று உலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.

(ப-ரை) வான் நின்று-மழையானது நீங்காமல் பெய்து வருவதால், உலகம் . உலகிலுள்ள உயிர்கள், வழங்கி வருதலான்-நிலைபெற்று இருந்து வருகின்றன, (ஆதலால்) தான் அமிழ்தம் - அம்மழைதான் அமிழ்தமாகும், என்றுஎன்பதாக, உணரல் - தெரிந்து கொள்ள வேண்டிய, பாற்று-தன்மையினை உடையதாகும்.

(கடரை) மழை இடைவிடாமல் பெய்வதால் உலகி லு ள்ள உயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், அம்மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும்.