பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

2. துப்பார்க்கு துப்பு:ஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்

துப்பு:ஆய தூஉம் மழை.

(ப-ரை) துப்பார்க்கு - உணவு உண்பவர்களுக்கு, துப்பு:ஆய நல்ல தான, துப்பு - உணவுகளை, ஆக்கி . உண்டாக்கி, துப்பார்க்கு. (உணவுகளை) உண்பவர்களுக்கு, துப்பு:தானும் உணவு, ஆயது உம் - ஆவதும், மழை - மழையே யாகும்.

(க-ரை) உண்பவர்களுக்கு நல்ல உ ண வு க ைள உண்டாக்கிக் கொடுப்பதும், தானும் உண்பவர்களுக்கு, உணவாக இருப்பதும் மழையே யாகும்.

3. விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்(து)

உள்கின்று உடற்றும் பசி.

(ப. ரை) விண் - மழை, இன்று - பெய்யாதபடி, பொய்ப்பின்-பொய்த்து விடுமானால், விரிநீர் . கடலால் சூழப்பட்ட, வியன் - அகன்ற, உலகத்தினுள், பசிநின்று . பசி நிலையாக நின்று, உடற்றும் - எல்லா உயிர்களையும் துன்புறுத்தும்.

[க-ரை) மழையானது வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால் கடலால் சூழப்பட்ட இவ். வுலகில் பசியானது நிலைத்து நின்று எல்லா உயிர்களையும். துன்புறுத்தும்.

4. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளம்குன்றிக் கால்.

(ப.ரை உழவர் . உழவர்கள், ஏரின் . ஏரினால், உழாஅர் - உழவுத் தொழிலினைச் செய்யமாட்டார்கள். (எப்போ தென்றால்) புயல் - மழை, என்னும் - எனப்படும், வாரி.வருவாய், வளம் - தனது வளமாகிய பயன், குன்றிக் கால்-குறைந்து விட்டால்,

|க-ரை) மழை பெய்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழ: மாட்டார்கள்,