பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

5. கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பது உம் எல்லாம் மழை. (ப-ரை) கெடுப்பது உம் - பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், கெட்டார்க்கு- (அதனால்) கெட்ட மக்களுக்கு: சார்வாய் - துணையாக நின்று பெய்து, எடுப்பது உம் காப்பாற்றி உயர்த்துவதும், எல்லாம் - ஆகிய எல்லாம் (செய்ய, வல்லது), மழை. மழையேயாகும்.

(க-ரை) பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும் கெட்டார்க்குத் துணையாய் நின்று, பெய்து காப்பாற்று வதும் ஆகிய எல்லாம் மழையே யாகும்.

6. விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது.

(ப-ரை) விசும்பின் - மேகத்திலிருந்து, துளி - மழைத் துளிகள், விழின் அல்லால் - வீழாமற் போனால், மற்று ஆங்கே . அப்பொழுதே, பசும் . பசுமையான, புல் - புல்லினது, தலை - தலையையும், காண்புஅரிது - பார்த்தல் முடியாததாகிவிடும்.

(கரை) மேகத்திலிருந்து மழைத்துளிகள் விழா விட்டால் பசும் புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும்.

7. நெடுங்கடலும் தன் கீர்மை குன்றும் தடிந்துஎழிலி

தான்கல்காது ஆகி விடின். (பரை) நெடும் - நீண்ட பெரிய, கடலும் - கடலும், தன் . தன்னுடைய, நீர்மை - தன்மையில், குன்றும் - குறைந்துவிடும், எழிலிதான் . மேகம்தான், தடிந்து - அக்கடல் நீரைக் குறைத்து, நல்காதாகி விடின் - அதனிடத்தில் மழை பெய்யாமல் இருந்து விட்டால்.

(க-ரை) மேகம் கடல்நீரைக் குறைத்து மீண்டும் அக்கடலில் மழை பெய்யாவிட்டால் பெரிய கடலும் தன்னுடைய தன்மையில் குறைந்து விடும்.