பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

(ப-ரை) வானோர்க்கும் வானவர்களுக்கும், ஈண்டு. இவ்வுலகத்தில், சிறப்பொடு சிறப்பான திருவிழாக்களுடனே கூடிய, பூசனை - பூசை, செல்லாது . நடக்காது, (எப்போ தென்றால்) வானம் - மழையானது, வறக்கு மேல் - பெய்யா விட்டால்.

(கரை) மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.

9. தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்.

(ப-ரை) வியன் - அகன்ற, உலகம் - இவ்வுலகத்தில், தானம் - தானம் செய்வதும், தவம் - தவம் செய்வதும், இரண்டும் - ஆகிய இரண்டும், தங்கா - நடைபெறாது (எப்போதென்றால்) வானம் - மழையானது, வழங்காது - பெய்யாது, எனின் - என்றால்,

(க-ரை) மழை பெய்யாவிட்டால் அகன்றஇவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங் களும் நடைபெறாது.

10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

(ப-ரை) யார் யார்க்கும்-எவ்வகைப்பட்ட மக்களுக்கும், டிர் இன்று நீரில்லாமல், உலகு - உலக வாழ்க்கையானது, அமையாது எனின் - நடை பெறாது ஆயின் (அதுபோல): ஒழுக்கு - மழை நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும்,