பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

வான் இன்று - மழையானது இல்லாவிட்டால், அமையாது நடைபெறாது.

(க-ரை) எப்படிப்பட்ட மேலானவர்களுக்கும் நீரில் லாமல் உலகியல் நடைபெறாது. மழையில்லாமல், அந்நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும் அமையாது.

3. நீத்தார் பெருமை

(முற்றுந் துறந்த முனிவரது பண்பு.

ஆற்றல், சிறப்பு முதலியன)

1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிபு.

(ப-ரை] ஒழுக்கத்து - சீரிய ஒழுக்கத்திலே நிலைத்து, நீத்தார் - துறந்தவரது, பெருமை - பெருமையினை, விழுப்பத்து - உயர்வான பொருள்கள் எல்லாவற்றுள்ளும் 1உயர்ந்ததென்று), வேண்டும் - விரும்புவதாகும், பனுவல்நூல்களது, துணிபு - துணிவான உறுதிப்பாடு என்பதாகும்.

(க-ரை சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்தவர்களது பெருமையினை மேலான பொருள்கள் எல்லாவற்றுள்ளும் மேலானதென்று விரும்புவது நூல்களினுடைய துணி பாகும்.

2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(ப-ரை) துறந்தார் . ஆசைகளை யெல்லாம் விட்ட

முனிவரது, பெருமை - பெருமையினை, துணைக்கூறின் - எண்ணிக் கணக்கிட்டு இவ்வளவென்று சொல்லப்