பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

போனால், வையத்து . இந்த உலகில், இறந்தாரை - இது. வரை இறந்தவர்களை, எண்ணிக் கொண்டு - எண்ணிக். கணக்கிட்டுக் கொண்டது, அற்று - போன்றதாகும்.

|க-ரை) முனிவர்களது பெருமையினை எண்ணிப் பார்த்து இவ்வளவென்று கூறப்புகுந்தால், அச்செயல் இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எண்ணியறிய முயன்றது போன்றதாகும்.

3. இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

(ப-ரை) இருமை - பிறப்பு, வீடு என்னும் இரண்டு, வகை - இன்ப துன்ப வகைகளை, தெரிந்து - அறிந்து தெரிந்து, ஈண்டு . இப்பிறப்பில், அறம் பூண்டார் - துறவறத்தினை மேற்கொண்டவரது, பெருமை . பெருமையே, உலகு-உலகத்தில், பிறங்கிற்று.சிறந்ததாகும்"

(கரை) பிறப்பு, வீடு என்னும் இரண்டின் வகைகளை அறிந்து துறவறத்தினை மேற்கொண்ட முனிவர்களிள் பெருமையே உலகத்தில் சிறந்ததாகும்.

4. உரன்என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்

வரன் என்னும் வைப்பிற்கு ஓர்வித்து. (ப-ரை) உரன் - திண்மையான அறிவு, என்னும் . என்கின்ற தோட்டியான் அங்குசத்தினால், ஒர் ஐந்தும் . பொறிகளாகிய ஐந்து யானைகளையும், காப்பான் . அடக்கிக் காப்பவன், வரன் என்னும் எல்லாவற்றினும் மேலானதென்று கூறப்படும், வைப்புக்கு - பேரின்ப நிலத் திற்கு, ஒர்வித்து - ஒரு விதையாவன்.

(க-ரை) அறிவு என்னும் அங்குசத்தினால் பொறிக வாகிய ஐந்து யானைகளையும் ஆசைகளில் செல்லாமல் காப்பவன் எல்லாவற்றிலும் மேலான வீடு என்னும் பேரின்ப நிலத்திற்கு ஒரு வித்து ஆவான்.