உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

10. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்.

செந்தண்மை பூண்டொழு கலான்.

(ப.ரை) எவ்வுயிர்க்கும்.எல்லா உயிர்களிடத்தும், செந். தண்மை அருளுடைமையினை, பூண்டு . கடமையாக மேற். கொண்டு, ஒழுகலான் - நடந்து கொள்ளுவதனாலே, அந்தணர் . அந்தணர், என்போர் - என்று கூறப்படுவோர், அறவோர் - ஆசைகளை அறுத்து அறநெறியிலே நின்ற முனிவர்களேயாவார்கள்.

|கடரை) எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்து கொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லப்படுபவர்கள்: அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.

4. அறன் வலியுறுத்தல்

(அறம் இன்னதென்பது அதனால் வரும் பயன்களைப் பற்றி வற்புறுத்தல்)

1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு. |ப-ரை) சிறப்பு ஈனும் - பெருஞ்சிறப்பினையும் தரும், செல்வமும் - மேலான செல்வத்தினையும், ஈனும் . தருவதாகும், (ஆகையினால்) உயிர்க்கு - மக்களுயிர்க்கு, அறத்தின் அறத்தினைவிட, ஊங்கு மேம்பட்ட, ஆக்கம் செல்வம், எவன் - வேறு என்ன இருக்கின்றது.

(க-ரை பெருஞ் சிறப்பினையும் செல்வத்தினையும் அளிக்கின்ற அறத்தினைவிட மக்களுயிர்க்கு மேம்பட்ட செல்வம் வேறு என்ன இருக்கின்றது?