உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

|க-ரை) மற்றவர்கள் கூறும் பழிக்கு அஞ்சிப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து வாழ்கின்ற இல்லறத் தானுடைய பரம்பரை என்றும் குறைவின்றி இருப்பதாகும்.

5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. (ப. ரை) இல்வாழ்க்கை - இல்லற வாழ்க்கையானது, அன்பும் அறனும் . அன்புடைமையினையும் அறத்தினை யும், உடைத்தாயின் - பெற்றிருக்குமானால், அது.அதுவே (இல் வாழ்க்கைக்கு) பண்பும் பயனும் - சிறந்த குணமும் பயனும் ஆகும் .

(க.ரை) இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்.

6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவது எவன். |ப-ரை) இல்வாழ்க்கை இல்லற வாழ்க்கையினை, அறத்தாற்றின்-அறமான வழியில், ஆற்றின்-நடத்துவானே யானால், புறத்தாற்றின்புறமான வேறு வழியில், போஒய்ப் பெறுவது.போய் அடைகின்ற பயன், எவன். யாது இருக்கிறது.

(க-ரை) அறநெறியில் இல்வாழ்க்கையினை ஒருவன் நடத்துவானேயானால், அப்படிப்பட்டவன் அதற்குப் புறம்பான வேறு வழிகளில் சென்று பெறுவது யாது? 7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. (ப.ரை) இல்வாழ்க்கை-இல்லற வாழ்க்கையில் இருந்து

கொண்டு, இயல்பினான்.இயல்பாகவே பொருத்தமான தன்மைகளுடன், வாழ்பவன்.வாழுகின்றவன், என்பான்.