பதிப்புரை
படும். அதனைத் தாம் மீண்டும் ஒருமுறை சரி பார்த்தல் வேண்டுமென்று அருளரீர்ந்த ஐயா அவர்கள் விரும்பிப் பெற்றுச் சரிபார்த்துச் சில திருத்தங் கஃளச் செய்து, தருவர். அதன் பின் அச்சுக்கோக்கப் படும். அச்சிடுங்கால் பக்க மெய்ப்பினையும் தாம் ஒரு முறை கட்டாயம் பார்க்கவேண்டுமென்று விரும்பிக் கேட்பர். அந்தப்படி அவர்கள் மெய்ப்புக்களெல்லாம் திருத்தித் தந்தபின்னரே அச்சிடப்பெறும், அவர்கள் குடியிருக்கும் வளமனை கழக நிலையத்திலிருந்து ஐந்து கல் தொலைவிலிருக்கின்றது. கூர்ந்த நினைவாற்றல், கண் பார்வைச் சிறப்பு, கடவுட்டுனை இவற்றால் இத் தமிழ் மந்திரத் தொண்டினை இயற்றிவருகின்றனர். இதுவே சிறந்த ஞானத் திருத்தொண்டு.
இந்த முறையில் திருக்கோவையார் ஒளிநெறியும், ஒளிநெறிக் கட்டுரையும் அச்சிடப் பெற்றன. இங்ஙனம் முடிப்பதற்கு முதுமை நிறைந்த தளர்வுற்ற ஆசிரியரவர்கட்கும், கழகத்தார்க்கும் எத்துணை உழைப்பும், காலக் கழிவும், பொருட் செலவும் ஏற்பட்டிருக்கும் என்பதைத் தமிழ் நன்மக்கள் அறிய வேண்டுமென்றே ஈண்டு எடுத்துரைக்க வேண்டியதாயிற்று.
ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பாவுக்கும் திருப்பால்லாண்டுக்கும் ஒளிநெறியும், ஒளிநெறிக் கட்டுரையும் 5-4-1969இல் தொடங்கிச் சொல்லி எழுதி வருகின்றனர். இவ்வாண்டு இறுதியில் அவ்விரண்டு நூல்களும் எழுதிமுடிக்கப்பெறும் என்கின்றனர். அதன் பின்னர் மேலே குறிப்பிட்ட செயல்களெல்லாம் முறையே நடைபெற்று அவையிரண்டும் அச்சிடப் பெறுதல் வேண்டும். அவற்றுடன் தெய்வத் திருமுறை பன்னிரண்டில் ஒன்பது திருமுறைகட்குத் தாம் ஒருவரே செய்து முடித்த திருவருட், பெரும் பேற்றை அருளார்ந்த ஐயா அவர்கள் பெற்றவர்களாவர். பல பேராசிரியர்களை கொண்டு பெரும் பொருட் செலவில் ஒரு பல்கலைக்கழகம் செய்து முடிக்க வேண்டிய. இவ்வரும்பெரும்