பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 15


கொண்டது அவனது கருணையினாலேயேயாம் என்பதை உலகம் அறிந்து பேசட்டும்' என்கிறார்.


14.

புகவே தகேன் உனக்கு அன்பருள்
யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட
தன்மை எப் புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரைப்
பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான் என்னை
நீ செய்த நாடகமே 10

உனக்கு அன்பர்-உன்னன்பர் உருபு முறைப்பொருளில் வந்தது. பொல்லாமணி-முழுமணி. தகவே-தகுதியாகுமா.

'துளையிடப்படாத மணி போன்றவனே! உன் அன்பர் கூட்டத்திடைப் புகுவதற்கு ஒரு சிறிதும் தகுதியில்லாதவன் ஆகிய என்னை, நீ ஆட்கொண்ட தன்மை தகுமோ? பொருத்தமுடையதோ? இப்படித் தகுதி இல்லாதவர் களையும் உயர்த்தி, விண்ணோரையும் தாழும்படியாகச் செய்கிறாயே, நீ ஆடுகின்ற இந்நாடகம் நகைப்பிற்குரியதாக அல்லவா இருக்கிறது' என்க.

அறிவுறுத்தல்


15.

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து
நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச் சீர் மணிக் குன்றே இடை அறா
அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருகத் தந்தருள்
எம் உடையானே 11

ஆடகம்-பொன். மணி-மாணிக்கம். என்னோடு அகத்தே எனக்குள் மனத்தே.