பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 19


'கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே' என்று முடிகின்ற, (திருவாச:468) பாடலும்,

துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின்
தூய்ம் மலர்க்கழல் தந்து எனைக்
கயக்க வைத்து அடியார் முனே
வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

(திருவாச. 474)

என்ற பாடலடிகளும் மேலே கூறிய கருத்தை வலியுறுத்தக் காணலாம்.

சாதாரணமாக, பிறப்புக்கு அஞ்சுவதாகவே பெரியோர்கள் பாடியுள்ளனர். ஆனால், அடிகளார் 'யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்' என்று பாடுவதன் நோக்க மென்ன? பிறப்புப்பற்றிய அச்சம் எதனால் போயிற்று என்ற வினாவை எழுப்பினால் பெருந்துறையில் குரு நாதரின் திருவடிக்காட்சியை இப்பிறப்பிலேயே பெற்றதால் பிறப்பு அஞ்சேன் என்று உறுதியாகப் பாடமுடிந்தது. ஆனால், அக்காட்சி நிலைபேறுடையதாக அல்லாமல் ஊனக் கண்களிலிருந்து மறைந்துவிட்டமையின் அது மீண்டும் கிடைக்காமலேயே இறந்துபடும் நிலைமை எய்துமோ என்ற எண்ணம் தோன்றலாயிற்று. அப்படி இறப்பு ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் ஆற்றல் தம்பால் இல்லை என்பதை நினைந்தவுடன் 'இறப்பதனுக்கு என்கடவேன்' என்று பாடுகின்றார்.

இரண்டாவது அடியில் விண்ணுலகம் பெறினும் வேண்டேன், மண்ணுலகம் ஆளும் ஆட்சியும் வேண்டேன் என்று கூறுவதால் அத்திருவடிக் காட்சிக்குப் பதிலாக ஒருவேளை இறைவன் இந்த இரண்டினையும் தருவதாக இருப்பினும் அவற்றை வேண்டேன் என்றார்.

மண் அரசாட்சியையும் விண் அரசாட்சியையும் ஒருசேர ஒதுக்கிய அடிகளார், அடுத்த இரண்டு அடிகளில்