உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவெம்பாவை விளக்கம்

மைத்து. திருக்கடவூர் உறையும் அபிராமி அம்மையை விழுத்துணை’ என்பார் அபிராமி பட்டர். இங்கு மாணிக்கவாசகப் பெருமான் விழுப்பொருள் என்று சிவனைக் குறிப்பது சற்றுச் சிந்திக்கத்தக்கது. சிவனுடைய புகழைப் பேசுவதாகவே பாடல்கள் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட அடிகளார் கூற்றுடன், ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயுள் உறையும் எம் ஆதியே’’ என்னும் ஞான சம்பந்தப் பிள்ளையாரின் கூற்றையும் நாம் ஒருங்கு வைத்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம் மேனி எம்மானை எல்லாரும் பாடியும்கூட, உள்ளே உறங்குபவள் உறங்கிக் கொண்டே இருக்கின்றாள். எனவே வாயிலுக்கு வெளியே பரம்பொருளின் புகழைப் பாடிநின்ற பெண்கள் இங்ஙனம் அறிவின்றித் துரங்கிக் கொண்டிருப்பது என்ன முறைமையிற் சேர்த்தியோ?* என்று நெருங்கிக் கேட்கிறார்கள். ஈ .ெ த ன் ன உறக்கமோ?’ என்ற வினா அவர்கள் வியப்பின் எல்லையை வெளிப்படுத்துகின்றது. சற்றுத் திருவாயையாவது திறந்து பேசலாம் இல்லையா?’ எனும்படி வாய் திறவாய்’ என்கிறார்கள். அப்போதும் அவள் எழுந்த பாடில்லை. எனவே அவளை வாழ்வாயாக’’ வாழி’ என்னும் எள்ளற் குறிப்பமைய வாழ்த்துகின்றார்கள். பிறகு மேலும் அவளோடு பேசத் தொடங்குகின்றார்கள். நமக்கு அரசனாகும் ஆண்டவனுக்கு, அன்பு செலுத்தும் முறை இவ்வகை தானோ, உலகிற்கு முதல்வனாக விளங்கும் ஒப்பற்றவனும் உமை பங்கனுமாகிய உமாபதி யையே நீ பாடுவாயாக’’ என்று அவளுக்கு நல்லறிவு கொளுத்துகிறார்கள். -

ஆழியான் அற்புடைமை ஆமாறு இவ்வாறோ?’

ஆழியான் என்பதனை அரசனாகக் கொண்டால் பழந்தமிழர் கொள்கை விளக்கமுறும் . நெல்லும்