உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவெம்பாவை விளக்கம்

சுட்டினார். அத்தமிழ் பேசும் தமிழ்க்குடியின் தொன்மை யினையும் ஒருங்கே காட்டினார், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’’ எனப் பேசப்பெறும் தமிழ்க்குடி இற்றைக்குச் சற்றேறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே சிவ பரம்பொருளை - சிவனெனும் முழுமுதற் பொருளை வழுத்தி வந்தது என்பதற்குச் சிந்து கங்கைச் சமவெளி நாகரிகம் சான்றுரைக்கும். ஹரப்பா, மொகஞ்சதாரோ இடிபாடுகளை அகழ்ந்து பார்த்த பொழுது, அவ்விடத்தில் இலிங்க வழிபாடு நிலவியது என்பதனை , ஆராய்ச்சியாளர் கண்டுள்ளனர். கடல் கடந்த நாடுகளிலும் சிவ வழிபாடு அந்நள்ளில் சிறந்திருந்தது. எனவே முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ச் சிவனைக் கொள்ளுதல் சாலப் பொருத்தமுடைத்தேயாகும். மேலும் இன்றும் .சிவபரம்பொருளின் வழிபாடு எங்கும் இடையறாது நிலவுகின்றது. எனவே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனாகத் திகழ்கின்றான். அப்பேரருட் பெருந் த கையினன்.

இப்போது இறைவனின் பழமையினையும் புதுமை

.யினையும் ஒருங்கே புலப்படுத்திப் புகழ்ந்த கன்னியர்,

அப்பெருமானிடம் தம் உறுதியான உள்ளப் பாங்கினை உரைக்கலுறுகின்றார்கள்.

  • உன்னை ஆண்டவனாகக் கிடைக்கப் பெற்ற உன்னுடைய உண்மை அடிமைகளாகிய நாங்கள் உன் தொண்டர்களுடைய திருவடிகள் வணங்கி நிற்போம். அவ்வாறே அவர்களுக்கே உரிமை உடையவர்கள் ஆவோம். அத்தகுதி வாய்ந்த அடியார்களே எங்கட்குக் கணவர் களாகும் தகுதித் திறம் சான்றவர்கள் ஆவர். அவர்கள் விரும்பி எங்களை எவ்வெவ்வாறு பணி செய்ய ஏவலிடு கின்றார்களோ அவ்வகையிலேயே அவர்களுக்கு அடிமை -யாக அவர்களிட்ட பணிகளைப் பாங்குறச் செய்து