உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவெம்பாவை

யிருக்கிறம்ை; அதனல் அவன் சிவபெருமான் பெருமையை அறியவில்லை. நான்கு முகங்களை உடைய பிரமனுக்கு எட்டுக் கண்கள். இருந்தபடியே எல்லாத் திசைகளையும் பார்க்கும் ஆற்றல் உள்ளவன். அவன் பிரபஞ்சத்தைப் பார்க்கிருன். ஆனல் எல்லாவற்றுக்கும் மூலகாரணகை இருக்கும் இறைவனை எண்ணுமல் தான் படைப்பதனுல்தான் உலகம் உண்டாகிறது என்ற எண்ணத்தோடு பார்க்கிருன். அதனல், "நான்முகனும் காணு என்கிருள்.

இறைவன் அசஞ்சலமானவன். யார் இறந்துபட்டாலும் தான் நித்தியனுக இருக்கிறவன். வறப்பினும் வளந்தரும் மலைபோல யாவரினும் உயர்ந்து நிற்கிறவன். ஆதலால் அவனை மலையினை என்கிருள். அத்தகையவனே "நாம் போலறிவோம்' என்கிருயே' என்கிருள். நாமாக்கும் அறிவோம்’ என்ற உலக வழக்குப் போன்றது. இது. என்று உள்ள பொக்கங்கள் என்பது, என்று இவ்வாறுள்ள பல பொய்கள்’ என்னும் பொருளுடையது. பொக்கம்-பொய். இறைவனே, மால் அறியா நான்முகனும் காணு மலே' என்று அவள் சொன்ன அளவிலே கேட்கிறவர்களுக்குப் பாலும் தேனும் ஊறுவது போல இருந்தது. ஆனல், நாம் போல் அறிவோம்’ என்பதைக் கேட்டவுடள் அவளுடைய வஞ்சகம் தெரிந்துவிட்டது. ஆகவே, பால் ஊறு தேன் வாய்ப் படிறீ என்கிருள். கடை-வாசல். ஞாலமே முதலிய ஏகாரங்கள் எண். இ ைற வ ன் தேவர்களை விட உலகிலுள்ள அன்பர்களுக்கு எளியவளுதவின் முதலில் ஞாலமே' என்ருள். உலகம் பதினன்கு என்பர். ஆதலின் பிற என்று பூமியையும் தேவலோகத்தையும் அன்றிப் பிற உலகங்களைக் குறித்தன.

இறைவன் நம்மிடத்தில் குற்றம் இருந்தாலும் நம்மிடம் உள்ள பக்தி ஒன்றையே எண்ணி ஆட்கொண்டு பிறகு நம் குற்றங்களைத் தீர்த்து வைக்கிருன். அதனல், நம்மை ஆட் கொண்டருளிக் கோது ஆட்டும்’ என்கிருள். சீலம் என்பது எளியம்ை தன்மை. தன்னினும் உயர்ந்தாரைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/29&oldid=579222" இலிருந்து மீள்விக்கப்பட்டது