பக்கம்:திருவெம்பாவை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உணராய் உணராய் 27

"இன்னும் நீ துயில் நீங்கவில்லை. நாங்கள் பேசுவதையும் உணரவில்லை."

- உணராய் உணராய் காண்

'மயிர்ச் சாந்தைப் பூசிய குழலையுடைய பெண்ணே, உன் தன்மை இது தான?”

ஏலக் குயலி பரிசேல் ஓர் எம்பாவாய் மால் அறியா நான் முகனும் காணு மலையினேகாம் போல் அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளேபேசும் பால் ஊறு தேன்வாய்ப் படிநீ கடைதிறவாய், - ஞாலமே விண்ணே, பிறவே. அறிவரியான் கோலமும், கம்மை.ஆட் கொண்டருளிச் கோது.ஆட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று r. ஒலம் இடினும், உணராய், உணராய்காண்; ஏலக் குழலி, பரிசு! ஏலோர் எம்பாவாய்!

"திருமாலால் அறியப்படாதவனும் நான்முகப் பிரமல்ை காணப்படாதவனும் மல்ே போன்றவனுமாகிய சிவ. பெருமான நாம் 'அறிவோம் என்றும் பிறவாறும் உள்ள பொய்களையே பேசும், பால் ஊறுகிறதும், தேன் பிலிற்றுவது முடைய வாயைப் பெற்ற வஞ்சகமுடைய பெண்ணே, உன் வாயிலைத் திறப்பாயாக. பூமியும் தேவருலகமும் பிற உலகங்களும் அறிவதற்கரிய எம் பெருமானுடைய அழகிய திருக் கோலத்தையும், ஒன்றுக்குப் பற்ருத நம்மையும் தனக்குத் தொண்டராகக் கொண்டு நம்முடைய குற்றங் களைப் போக்கி யருளும் எளிய சீலத்தையும் பாடிச் சிவனே, சிவனே என்று இத்தனே பேரும் சேர்ந்து கூக்குரல் இட்டா லும் நீ துயில் நீங்காமலும் காங்கள் சொல்வதை உணராம லும் இருக்கிருயே! மயிர்ச் சாந்து பூசிய கூந்தலேயுடையே பெண்ணே, உன் தன்மை இதுதான? -

மால் என்பது மயக்கத்தையும் குறிக்கும். இரட்சக கர்த்தாவாக இருக்கிற தன் நிலையை எண்ணி அவன் மயங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/28&oldid=579221" இலிருந்து மீள்விக்கப்பட்டது