பக்கம்:திருவெம்பாவை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. உணராய், உணராய்'

பின்னும் ஒரு வீட்டுக்குப் போகிருர்கள். அவள் இறைவனிடம் பக்தி உள்ளவள்தான். என்ருலும் உறக்கத் தின் சுகத்திலே மயங்கிப் படுத்திருக்கிருள். இப்போது அவளைப் பார்த்து வந்தவர்களில் தலைவி பேசத் தொடங்கு கிருள்.

'திருமால் அறியாதவனும் நான்முகனுற் காணப்படாத வனும் ஆகிய மலை போன்ற சிவபெருமானே நாம் அறிவோம் என்று இத்தகைய பொய்களைப் பேசும் வஞ்சகம் உள்ள பெண்ணே, பாலூறுகிற தேன் படிந்திருக்கிற வாயை உடையவளே; கதவைத் திறப்பாயாக' -

மால்அறியா நான்முகனும் காணு மலையின்காம் போல்அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்.

"நாங்கள் உன் வீட்டு வாயிலில் வந்து நின்று எம் பெருமானைப் பாடுகிருே மே! உலகத்தாராலும் விண்ணகத் தாராலும் பிற உலகத்தாராலும் அறிவதற்கரியவனுடைய திருக் கோலத்தையும், அலன் ஒன்றுக்கும் பற்ருத நம்மையும் ஆ ட் கொண் டு நம், குற்றங்களைத் தீர்த்து நவம் செய்யும் எளிய சீலத்தையும், பாடி, சிவனே, சிவனே என்று இத்தனை பேரும் சேர்ந்து ஓலமிடுகிருேமே!’

ஞாலமே, விண்னே, பிறவே அறிவரியான்

கோலமும். நம்மை.ஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும்பாடிச் சிவனே, சிவனே என்று . ஒலம் இடினும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/27&oldid=579220" இலிருந்து மீள்விக்கப்பட்டது