பக்கம்:திருவெம்பாவை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் ஊறு தேன்வாய்ப் படிறீ! 25

ஏலம் என்பது கூந்தலில் பூசுகின்ற ஒருவகைச் சாந்து. இங்கே ஏலக் குழவி என்பது உலக பாசத்தில் ஈடுபட்டு அதிலே ஈடுபட்டுக் கிடக்கிருள் என்னும் குறிப்பு உடையது. பரிசு-தன்மை. இதல்ை படுத்து இருக்கிறவள் இயற்கை யிலேயே இறைவனிடம் அன்பு இல்லாதவள். பேசும்போது மட்டும் மிகச் சிறப்பாக இறைவனிடம் அன்பு உள்ளவள் போலப் பேசுகிருள் என்று குறிப்பிடுகிருள் வந்தவள்.

மால்அறியா கான்முகனும் காணு மலையினைநாம் போல்அறிவோம்' என்றுஉள்ள பொக்கங்க ளேபேசும் பால் ஊறு தேன்வாய்ப் படிறீ, கடைதிறவாய்; ஞாலமே, விண்ணே, பிறவே அறிவுஅரியான் கோலமும், கம்மை.ஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண்; ஏலக் குழலி பரிசு! ஏலோர் எம்பாவாய் (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/26&oldid=579219" இலிருந்து மீள்விக்கப்பட்டது