பக்கம்:திருவெம்பாவை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவெம்பாவை

சித்தமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமையினால் அவள் சொன்னது அத்தனையும் பொய் என்று சொல்கிருள்.

பொக்கங்க ளேபேசும், பால்ஊறு தேன்வாய்ப் படிறீ!

என்பது அதைச் சுட்டுகிறது.

இறைவனை நன்கு தெரிந்துகொண்டவர்கள் இந்த உலகத்திலுள்ள பக்தர்கள்தாம். தேவர்கள் ஒரளவுதான் புரிந்துகொள்வார்கள். மற்ற உலகத்தில் உள்ளவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. ஆகவே, முதலில் உலகத்தைச் சொல்லி, பிறகு தேவலோகத்தவர்களேயும், பிறவற்றையும் சொல்கிருள். -

ஞாலமே விண்ணே, பிறவே அறிவுஅரியான் கோலமும், நம்மை.ஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடி

என்று சொல்கிருள். இறைவனுடைய கோலம், அவன் பக்தர்களுக்கு உள்ள துன்பங்களைப் போக்கி ஆட்கொள்ளும் சீலம் ஆகிய இரண்டையும் பாராட்டுகிருள். சீலம்எளிவந்து ஆட்கொள்ளும் தன்மை. "அவனை வாயாரப் பாடுகிருேம். உனக்குக் காது கேட்கவில்லையா?படிறீ! என்று சொல்கிருள். சிவனே சிவனே என்று இரண்டு முறை சொல்லி யாவரும் பாடுகிறர்கள். ஒரு முறை சிவனே என்ருலே உறக்கம் நீங்கவேண்டும். இரண்டாவது முறை சொன்னவுடன் தன் கடமையை உணரவேண்டும்.இரண்டும் இல்லாமல் படுத்துக் கிடக்கிருள்.

சிவனே சிவனேஎன்று

ஒல மிடினும் உணராய் உணராய்காண்; ஏலக் குழலி, பரிசுஏலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/25&oldid=579218" இலிருந்து மீள்விக்கப்பட்டது