உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உணராய், உணராய்' - 29

பழகுதல் உலகினர் இயல்பு. இறைவனினும் உயர்ந்தவர் யாரும் இல்லை. அவன் கருனேயினல் அடியவர்களே ஆட் கொண்டு கோது ஆட்டுகிருன். தாய் அழுக்கு நிறைந்த தன் குழந்தையை எடுத்துப் பிறகு நீராட்டித் தூய்மைப்படுத்து வது போன்றது. இது. கோலம் பாடிச் சிவனே என்ருேம்: சீலம் பாடிச் சிவனே என்ருேம்’ என்பதைக் குறித்து, சிவனே சிவனே என்கிருள். பலர் வந்து கூட்டமாய் நிற்றலின் அவர்கள் குரல் ஓலமிடுவதுபோலக் கேட்கிறது. ஒலம் என்பது இரக்கக் குரல். 'இவள் இப்படி இருக்கிருளே’ என்ற இரக்கத்தால் அவர்கள் குரல் ஒலம் ஆயிற்று. முதலில் உள்ள உணராய் என்பதற்கு, விழிக்காமல் இருக்கிருயே என்றும், பின் உள்ள உணராய் என்பதற்கு, நாங்கள் கூறுவதைத் தெளியாமல் இருக்கிருயே என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

ஏலம்-மயிர்ச் சாந்து உன்னை அலங்கரித்துக்கொண்டு உன் கோலத்தைப் பார்த்து மகிழும் இயல்புள்ளவளாக இருக்கிருயே அன்றி எம்பெருமானுடைய கோலத்தைக் காணும் விருப்பம் இல்லாமல் இருக்கிருய்!” என்பதைக் குறிப்பிக்கிறது, 'ஏலக்குழலி என்னும் விளி. குழலைச் சொன்னதால் மற்ற அங்கங்களையும் அணி செய்து கொள்ப வள் என்பது உபலட்சணத்தால் பெறப்படும்.

"நீயாக உணரா விடினும் நாங்கள் வந்து உரக்கச் சொல்லியும் நீ உணராமல் இருக்கிருயே! என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/30&oldid=579223" இலிருந்து மீள்விக்கப்பட்டது