உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திருவெம்பாவை

முப்பத்து முக்கோடி தேவர்களும் நினைப்பதற்கு அரியவகை இருப்பவன் அவன். தனக்குச் சமானமில்லாத ஒருவன். அவன் புகழ் விரிக்க விரிக்கப் பரவும்; ஆதலால் இகஞ் சீரான்’ என் கிருள் அவன் எழுந்தருளும்போது முன்னவே வாசிக்கின்ற சின்னங்கள் ஒவிக்கின்றன 'அவற்றைக் கேட்ட உடனேயே சிவனே என்று வாய் திறந்து முழங்குவாயே’ என்கிருள். பாடுவதற்கு முன்னுலே தரனன என்று இப்போது வழங்குவார்கள். அதுபோல தென்ன என்று அப்போது தொடங்குவார்கள். அப்படித் தொடங்குவதற்கு முன்னுலே தீயைச் சேர்ந்த மெழுகுபோல உருகி நிற்பாயே! நீ இப்போது ஒன்றும் செய்யாமல் இருக்கிருயே’’ என்கிருள். 'நாங்கள் தனித்தனியாகவும், வெவ்வேருகவும் இறைவனைப் போற்றுகிருேம். என் ஆன போன்றவன், என் அரையன், இனிய அமுதுபோன்றவன்' என்று எல்லோரும் சொன்ளுேம். நீ அதைக்கேள். தனித்தனியாகவும் சொன்ளுேம். அவற்றை கேட்டு இன்னமும் உறங்குகிற யா? துயிலுதியோ ? . சிவ பெருமான் எழுந்தருளும்போது முன்னலே திருச்சின்னங்கள் வாசிப்பது வழககம் இறைவன் ஆணேயைப் போன்ற கம்பீரம் உடையவன் ஆதலால் என் ஆனே' என்ருள். திருவண்ணுமலைப் பெருமானுக்கு என் ஆன என்பது ஒரு திருநாமம், உலகத்திலுள்ள அரசர்கள் எல்லாம் குறிப்பிட்ட பகுதியை ஆள. எல்லா உலகங்களையும் தன ஆட்சிக்குள்ளே கொண்டு காப்பாற்றுகிறவன் இறைவன் ஆதலால், என் அரையன்' என்று சொல்கிருள். தேவர்கள் கடைந்து உண்ட அமுது அவர்களுக்குச் சாவாமையைத் தரும் என்று எண்ணி ர்ைகள். ஆல்ை அதை உண்டும் அவர்கள் இறந்து விட்டார்கள். . . .

. "விண்ளுேர் அமுது உண்டும் சாவ' என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. அந்த அமுதத்தைப் போன்று இல்லாமல் என்றைக்கும் இன்பம் தரக்கூடியதாக, பிறவிப் பிணியைப் போக்கி மீண்டும் பிறந்து இறக்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/39&oldid=579232" இலிருந்து மீள்விக்கப்பட்டது