பக்கம்:திருவெம்பாவை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளா கிடத்தியால் 39

செய்கின்ற இன்னமுது அவன். அவ்வாறு எல்லோரும் சேர்ந்து சொன்ளுேம்.நீ அதைக் கேட்டாய். வெவ்வேருகவும் சொன்ளுேம். அவற்றைக் கேட்டும் இன்னும் உறங்கு வாயோ?” என் கிருர்கள். -

முன்பெல்லாம் இறைவனுடைய புகழைப் பேசுவாயே இப்போது அவற்றை மறந்து போனயோ? முன் ஒன்று சொல்லிப் பின் ஒன்று செய்யும் வஞ்சக நெஞ்சம் கொண்ட வர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிருயே! ஒரு சொல்லும் சொல்லாமல், எந்த விதமான மெய்ப்பாடும் இல்லாமல் சும்மா படுத்துக்கிடக்கிருயே! 'வன்நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்திருயே’ என்கிருள் உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. உன்னே ஆட்கொணடிருக்கும் உறக்கம் அவ்வளவு வலியதாய் இருக்கிறது. அந்த உறக்கத் தின் தன்மை என்ன ஆச்சரியம்! இதைப்போல நான் கண்டது இல்லை; என்னே துயிலின் பரிசு!"

பலபேர் சேர்ந்து பாடியும் எழாமல் இருப்பதை பார்த்து அவ்வாறு சொல்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/40&oldid=579233" இலிருந்து மீள்விக்கப்பட்டது