பக்கம்:திருவெம்பாவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஈது என்ன உறக்கமோ?

வேருெரு வீட்டுக்குப் போய் அங்கே படுத்துக் கிடச்கும் பெண்ணைப் பார்த்துப் பேசுகிருள் வந்தவர்களில் தலைவி.

'விடிந்து விட்டதே! அஃறிணையாகிய கோழி கூவி விட்டது. மற்றப் பறவைகளும் எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. சப்தஸ்வரங்களை உடைய வாத்தியங்கள் முழங்கு கின்றன. விடியற்காலத்தில் ஊதும் வெண் சங்கை எங்கும் ஊதுகிருர்கள். இவை உன் காதில் விழவில்லையா?"

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்; ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்.

"நாங்கள் யாவரும் உன் வீட்டு வாசலுக்கே வந்து இறைவனைப் பாடிளுேமே. அவன் தனக்குச் சமானம் வேறு இல்லாத பரஞ்சோதி. அவனுடைய மேலான கருனேக்கும் ஒப்பு இல்லே. அவனைப் பற்றியன யாவும் ஒப்பு இல்லாதவை, இவற்றையெல்லாம சொல்லி நாங்கள் பாடிளுேம், நீ அவற்றைக் கேட்க வில்லையா?’ - o

கேம்இல் பரஞ்ச்ோதி. கேம்இல் பரங்கருண. கேழ்இல் விமுப் பொருள்கள் பாடிளுேம், கேட்டிலையோ?

“ff வாழ்வாயாக! இவ்வளவு நாங்கள் பேசியும் நீ உறங்குகிருயே! இது என்ன உறக்கமோ! உன் வாயிலைத் திறவாய்.” -

வாழி: ஈது என்ன உறக்கமோ? வாய்திறவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/41&oldid=579234" இலிருந்து மீள்விக்கப்பட்டது