பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 21

1936இல் கருவிலே திருவுடைய கோவிந்தன் ஜெமினி ஸ்டுடியோ விளம்பரப் பிரிவில் சேர்ந்து பணியாற்றியபோது அவர் பாட்டனார் படைக்கும் தொழில் தரித்திரத்தின் ஊற்று' என்று கோவிந்தனின் படைக்கும் ஆற்றலை முடக்கினார். அதன் பின்னரே நண்பர் இராஜாபாதர் உதவியால் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த தமிழரசு' என்னும் திங்கள் இதழில் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார்.

1939ல் தமிழரசு' இதழில் பாவேந்தர் பாரதிதாசன் போன்ற புலவர்களும், அறிஞர்களும் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ் மேல் பற்றும் எழுத்தார்வமும் கொண்டிருந்த கோவிந்தன், அவர்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத போதிலும் அவர்கள் எழுத்தை அச்சுக்கோக்கும் வாய்ப்பைப் பெற்றார். சான்றாகப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதியுள்ள “தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் கவிதை வரியை முதன் முதலில் அச்சுக்கோத்த பெருமை கோவிந்தனுக்கே உரியது.

1939 ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் லீலாவதி என்னும் பெண்மணியைக் கோவிந்தன் மணந்தார்.

1940இல் தலைமகன் பிறந்தான். பெயர் வரதராசன். 1941இல் புளியந்தோப்புப் பகுதியில் கோவிந்தன் 'ராயல் ஓட்டல்' என்ற பெயரில் மிலிட்டரி ஓட்டல் ஒன்றை நடத்தினார்.

1942இல் நண்பர் ராஜாபாதர் உதவியால் 'கல்கி' அச்சகத்தில் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். ஏற்கனவே சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் போன்ற