பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 23

1953இல் ‘சமுதாய விரோதி என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. முன்னுரை கி. சந்திரசேகரன். அதே ஆண்டில் விந்தன் வசனம் எழுதிய 'வாழப்பிறந்தவள்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. 1954இல் ஆகஸ்ட் மாதம் மனிதன் இதழ் வெளி வந்தது. அதே ஆண்டில் 'அன்பு', 'கூண்டுக்கிளி' என்னும் இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுக்கும் விந்தன் வசனம் எழுதியதோடு சில பாடல்களும் எழுதியுள்ளார். இரண்டு படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.

1957இல் 'அமுதசுரபி' இதழில் அன்பு அலறுகிறது என்ற பெயரில் தொடர்கதை எழுதினார். அந்தத் தொடர் தன் 'சிநேகிதி நாவலைத் தழுவியிருப் பதாகவும் விமர்சனம் செய்வதாகவும் அகிலன், விந்தன் மேல் வழக்குத் தொடர்ந்தார்.

1959இல் புத்தகப்பூங்கா என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். ஜெயகாந்தன் சிறுகதைகளைத் தொகுத்து ஒரு பிடி சோறு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தச் சிறுகதைத் தொகுப்புதான் ஜெயகாந்தனை ஆனந்தவிகடனுக்கு அடையாளம் காட்டியது.

1960இல் 'அமுதசுரபி' இதழில், 'மனிதன் மாற வில்லை' என்ற தொடர்கதையை எழுதினார். அதே காலத்தில் சொந்தமாகச் சினிமா கம்பெனியை ஆரம்பித்தார், மல்லிகா புரொடக்ஷன் என்ற பெயரில்.

1961இல் 'கனவிலே வந்த கன்னி' என்ற பெயரில் ராணி இதழில் தொடர்கதை எழுதினார்.