பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

32 மு. பரமசிவம் :

மனத்தில் பதியும் என்பது பல அறிவுஜீவிகளின் கருத்து.

அந்த நோக்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோரை வெகுவாகப் பாராட்டலாம்.

சினிமா உலகம் எழுத்தாளனுக்குத் தந்து கொண்டிருந்த தொல்லைகள்; ஆள் மாறாட்டங்களை இன்னும் பிற கீழ்த்தரமான செயல்களை ஒட்டு மொத்தமாக எதிர்த்துப் போராடி வீழ்ந்து விடாமல், முன் வைத்த காலை பின்வாங்காமல், அறிவில், ஆற்றலில், மொழியில் மெளனப்புரட்சி செய்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் மேலே கண்ட மூவர்.

அதே காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமி போன்றவர்கள் சினிமாவின் உறவும் நட்பும் வேண்டாமென்று முற்றாக வெறுத்து, தேடிவந்த வாய்ப்புகளை உதறித் தள்ளிவிடாமல், மேலே கண்டவர்கள் போல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் இன்று சினிமா உலகம் பல இலக்கியவாதிகளின் சேவையில் சிறப்படைந்திருக்கும்.

இந்தக் கருத்தோட்டத்தின்படி இன்றைய எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், பூமணி போல் சிறந்த படங்களைத் தயாரிப்பதற்கும், அத்தகைய படங்களின் தயாரிப்புப் பணியில் தங்களை ஈடு படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் தமிழ்சினிமா இலக்கியத் தரமாக வளருவதற்கும் கை கொடுக்க வேண்டும்