பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 33

2.

சினிமாவில் கதை இலாகா என்று ஒன்று உண்டு. அது அசல் எழுத்தாளர்கள் பலரின் அறிவை, ஆற்றலை கூர் மழுங்கடிக்கும் கொலைக் களமாகும்! அ ந் த க் கொலைக்களத்தில் பல படைப்பாளிகள் பலியாகி இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் நீளும் என்பதால் உதாரணத்துக்குச் சிலரைக் காட்டலாம்.

ஜெமினி கதை இலாகாவில் புதுமைப்பித்தன், பட்சிராஜா, நரசுஸ் ஸ்டுடியோ ஆகிய கதை இலாகாவில் எம்.எஸ்.கண்ணன், மாடர்ன் தியேட்டர்ஸ், ஏ.வி.எம். கதை இலாகாவில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஜலகண்டபுரம் ப. கண்ணன், சி.பி.சிற்றரசு மற்றும் பலர். ஏவி.எம்.மில் ப.நீலகண்டன், ர.வேங்கடாசலம் ஆகிய தேசிய எழுத்தாளர்கள்.

ஒரு காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸும், ஏவி.எம்.நிறுவனமும் தி.மு.க எழுத்தாளர்களின் கோட்டையாக, கொள்கை பரப்பும் பாசறையாக

விளங்கின.

அந்தச் சமயத்தில் அறிஞர் அண்ணா சொன்னார்: 'நான் கதை-வசனம் எழுதும் சில படங்கள் தணிக்கை இல்லாமல் வெளிவந்தால் கோட்டையைப் பிடித்து விடுவேன்’ என்று. அதற்குக் களம் அமைத்துக் கொடுத்தவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், ஏவி.மெய்யப்பன், ஜூபிடர் சோமசுந்தரம், ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர்.

கி.வி - 3