பதிப்புரை தமிழ் மொழியின் மீதும், தமிழிலக்கியங்கள் மீதும் எனக்கு - மாணவப் பருவத்திலிருந்தே வேட்கை அதிகம். நல்லவைகளைத் தேடித் தேடிப் படிக்கும் பழக்கம் அப்போது முதலே எனக்கு உண்டு. ‘சிறந்த வாசகன் நான் என்ற பெருமையும் பெருமிதமும் எனக்கு எப்போதுமே உண்டு. 'கல்கி வார இதழில் திரு. நா.பார்த்தசாரதி அவர்களது பொன் விலங்கு என்ற தொடர்கதையைப் படித்தபோது இவ்வளவு சிறப் பாக எழுதும் இந்த நாவலாசிரியரை எப்படியும் நேரில் சந்தித்து உரையாடவேண்டும்' என்று ஆசைப்பட்டேன். அவருக்கு ஒரு கடித மும் எழுதினேன். அவரிடமிருந்து பதில் வந்த பிறகு - அவரைக் கல்கி அலுவலகத்தில் சந்தித்தேன். அந்த முதல் சந்திப்பு - ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்காலம் அவரோடு நெருங்கிப்பழகவும் - அவரது மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய உயிர் நண்பனாக இருக்கவுமான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததாக அமைந்தது. 1965-ஆம் வருடம் ஏப்ரல் 14-ந்தேதி நா.பா. தீபம் மாத இதழைத் தொடங்கினார். அப்போது முதல் நான் தீபம்' இதழின் பணிகளிலும் அவ்வப்போது என்னால் முடிந்த அளவு என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் அவரை வீட்டிலும் தீபம் அலுவலகத்திலும் சந்திப்பதை வாடிக்கையாக்கிக்கொண்டேன். அவருடைய இலக்கியப் படைப்புகள் போலவே அவரது தோழ மையும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1312.87 அன்று நா.பா.வின் தமிழ்மூச்சு ஒய்ந்தது; அவரது மறைவுக்குப் பின்னர் அவரது தீபமும் அணைந்தது. ஆனால் எனது நெஞ்சிலிருந்து அவ ரது நினைவுகள் அகலவே இல்லை; அவரது நினைவு நாளை - ஞானியாரடிகள் தமிழ்மன்றத்தின் வாயிலாக ஆண்டுதோறும் அறி ஞர் பெருமக்களை அழைத்து நடத்தி வருகிறேன். தீபம் பார்த்தசாரதியின் நினைவு நாளை - ஆண்டுதோறும் தவறாமல் நடத்துவதுபோலவே - அவரது செல்லக் குழந்தைகளில் ஒன்று என்பதாகவே கருதி - அவர் வளர்த்த 'தீபம்’ இதழின் நினை வையும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களில் நீங்காத வகை யில் நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
பக்கம்:தீபம் யுகம்.pdf/12
Appearance