வரையில் அதன் அச்சுப் கோப்பாளராகப் பணியாற்றி அண்மையில் மறைந்த திரு. ராஜதுரை, தீபம் இதழில் கடைசிப் பத்தாண்டுகள் முழுவதும் தீபம் அலுவலகத்திலேயே தங்கி, தீபம் வளர்ச்சிக்கு உத விய திரு. திருப்பூர் கிருஷ்ணன், ‘தீபம் யுகம் புத்தகம் வெளிவர என்னோடு ஒத்துழைத்த திரு. இரா. தியாகராசன், (சின்னக்குத்துசி), புத்தகத்தை அழகிய முறையில் அச்சிட்டுக் கொடுக்கும் பணியை ஏற்றுக்கொண்டு சிறப்புற முடித்துக் கொடுத்த திரு. ஆர்.ராஜசேகரன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நா.பா. மூலம் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவராகிய கோவை. மு.வேலாயுதம் அவர்கள் தமது விஜயா பதிப் பகத்தின் மூலம் இந்தப் புத்தகத்தின் விற்பனைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் - கடந்த 11 ஆண்டுகளாக தீபம் பார்த்தசாரதியின் நினைவு நாள் கூட்டங்களை நடத்திய போதெல் லாம் அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு - நா.பா.வின் இலக்கி யப் பணிகள் பற்றி சிறப்புற விமர்சன உரையாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக்கடமைப்பட்டுள்ளேன். நா.பா.வின் நினைவு போற்ற ஆண்டுதோறும் நினைவுக் கூட் டங்கள் நடைபெறுவது - தொய்வில்லாமல் தொடரும்; 'தீபம்' இதழ்க ளின் மூலம் நா.பா. ஆற்றிய இலக்கியத்தொண்டு என்றென்றும் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திருக்கும் வகையில் - வல்லிக் கண்ணன் மிகச் சிறப்பாக 'தீபம் யுகம்' எனும் இந்த விமர்சனப் பெட்டகத்தை உருவாக்கித் தந்திருக்கிறார். இன்னும் ஒரு ஆசை தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் ஒன் றில் நா.பா. நினைவு நாள் அன்று ஆண்டுதோறும் நா.பா.நினைவுச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் அது. நா.பா.மீது அளப்பரிய அன்பும் - மதிப்பும் கொண்ட தீபம் வாசகர்கள் - தமிழ் ஆர்வலர்கள் உதவியோடு - அந்த ஏற்பாட்டை யும் விரைவில் செய்து முடித்துவிட முடியும் என்று நம்புகிறேன். تي هيمن . م بع . لح
பக்கம்:தீபம் யுகம்.pdf/14
Appearance