வல்லிக்கண்ணன் 25 பத்தாவது ஆண்டின் நிறைவின் போது, ஆண்டு மலராக வந்த 121வது இதழில், பத்தாண்டுகளில் நம் பாதை' என்ற தலைப்பில் நா.பா. எழுதியது இது - "தீபத்தின் வரலாற்றில் கவலைகளும் உவகைகளும், போராட் டங்களும், வறுமைகளும், புதுமைகளும், பொறாமைகளும், வசதிக் குறையும் மன நிறைவுமாகப் பத்தாண்டு ஓடிவிட்டது! தொடங்கும் போது பல பத்திரிகைகளோடு தீபமும் வருகிறது என்று தான் தமிழ் வாசகர்கள் நினைத்தார்கள். நாளடைவில் தமிழில் தீபம் வருகிறது. வேறு பல பத்திரிகைகளும் வருகின்றன என்று தன் வாசகர்களைப் பிரித்து எண்ணச் செய்யும் நம்பிக்கையை தீபம் படிப்படியாக வளர்த் தது. தீபம் என்பது ஒரு நம்பிக்கை. பிறகு பத்திரிகையும் கூட தீபம் என்பது ஒர் இலக்கு. பிறகு இலக்கியம். தீபம் என்பது ஒர் இலக்கிய இயக்கம். பிறகுதான் பத்திரிகை. வியாபார ரீதியாக இதில் முதல் போட்டு இதை லாபயந்திரமாக வளர்க்க முன்வந்த பலரை நான் அனுமதிக்காத காரணம் இதன் இலக்கும் நம்பிக்கையும் தடுமாறக் கூடாது என்பதுதான். மாற்றியிருந்தாலோ, மாறியிருந்தாலோ, திசை தவறியிருந்தாலோ இதையும் பண்வளமுடையதாக்கி என்னையும் செழிப்பாக்கியிருப்பார்கள் சில வசதியுள்ள நண்பர்கள். முதலிலி ருந்தே அதில் உறுதியாக இருந்து விட்டேன். இதன் தரமான வாசகர் கள் அளித்த நல்லெண்ணம் தான் அதற்குக் காரணம்." நா.பா. ஒரு இலட்சியவாதி. காந்தீய தத்துவத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்த தேசியவாதி. நாட்டினிடத்தும் நாட்டு மக்களிடமும் அன்பும் அபிமானமும் உடைய மனிதநேயர் அவர். மக்களின் கலை, பண்பாடு, ஒழுக்கம் முதலியன சிதைவுறாது பேணிக்காக்கப்படுவது டன், அவை நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக் கம் கோண்டிருந்தார்.அவர் நல்லியக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் நாட்டமுடைய நல்ல எழுத்தாளர் அவர். இப் பண்புகள் பலவும் நா.பாவின் எழுத்துக்களிலும், 'தீபம்' இதழிலும் ஒளிபரப்பிக்கொண் டிருந்தன. இவற்றுக்கு மேலாக, தீமைகள் - சிறுமைகள் கண்டு கொதிப்புறும் தார்மீகக் கோபம் (அறச்சீற்றம்), ஊழல்களைச்சாடும் சத்திய ஆவேசம், பொய்யை - பொய்மைகளை எதிர்க்கும் நேர்மை, எதற்கும் - யாருக்கும் அஞ்சாத மெய்த்துணிவும், தனக்கு சரியெனப்
பக்கம்:தீபம் யுகம்.pdf/26
Appearance