உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 35 அருணாசலம், மல்லியம் ராஜகோபால், பி.ச. குப்புசாமி கவிதைகள், ராஜம் கிருஷ்ணன், சுந்தர ராமசாமி, பி.எஸ். ராமையா, நா. பார்த்தசா ரதி, க.நா. சுப்ரமண்யம் ஆகியோரின் சிறுகதைகளுடன், கி. ராஜநா ராயணன் எழுதிய பிரச்னைக் கதை'யான கோமதியும், தி.க, சிவசங் கரனின் நடைச்சித்திரம் ஒன்றும் இடம் பெற்றிருந்தன. மணிவண் ணன் (நா.பா.) எழுதிய 'பிரயாணம் எனும் குருநாவல் இதழுக்கு சிறப்பு சேர்த்தது. பொன்முடியின் இரத்தினச் சுருக்கம் மற்றும் வம்பு மேடை எனும் பகுதிகளும் இருந்தன. நா. பா. வின் காந்தியப் பற்றுதலை எடுத்துக்காட்டும் விதத்தில் காந்தி பற்றிய எண்ணக்குறிப்புகளும், காந்திஜீயின் சிந்தனைகளும் இதழில் பல இடங்களில் பரவிக் காணப்பட்டன. காந்தி பற்றிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக காந்தீய சமுதாய சமயம் என்ற பெட்டிச் செய்தியைக் குறிப்பிடலாம். “வைதிகத்திற்கும் லெளகிதத்திற்கும் ஒரு புதிய பாலமாகக் காந் திய சமுதாய சமயம் நமக்குக் கிடைத்தது. நினைப்பு, சொல், செயல் எல்லாவற்றிலும் எளிமையையும், எல்லாவற்றிலும் இந்திய மனப்பண்பையும் இணைத்துக் கொள்கிற சுதேசிய மனப்பான்மையையும் காந்தியம் இந்த நூற்றாண்டில் நமக் குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த வகையில் சிந்தித்தால் மத்துவாச்சாரியார், சங்கரர், ராமா னுஜர் போல் காந்தியடிகள் ஒரு புதிய தேசிய சமயத்தைக் கண்டு அளித்த சமுதாய சிற்பியாகிறார். ஆசாரக்கள்ளர்களின் போலியான படிப்பில் சிக்கி இந்தியன் சீரழிந்து விடாமல் நாம் புதிய சமுதாயப்பா தையைக் கண்டு நடக்கச் செய்தவர் காந்தி அடிகள்." மகாகவி பாரதியாரின் கருத்துக்களும் அங்கங்கே பெட்டிச் செய்தி'களாகத் தரப்பட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/36&oldid=923229" இலிருந்து மீள்விக்கப்பட்டது