உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தீபம் யுகம் 3. தீபத்தின் சிறப்புகள் தமிழ் இலக்கிய உலகில் தீபம் விட்டுச் சென்ற பாரம்பரியம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வெகுஜனப் பத்திரிகைகளுக்கி டையே இலக்கிய தாகமெடுத்தவர்களின் வேட்கை தணிக்க வந்த ஒற்றை ஊற்றாக இருந்தது தீபம்." இவ்வாறு கோமல் சுவாமிநாதன் சுபமங்களா இதழில் 'தீபம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்களும் இலக்கிய அன்பர்க ளும் உணர்ந்த உண்மை இது. - 1965 ஏப்ரல் 15 முதல், 1988 மே வரை, 239 இதழ்கள் பிரசுரம் பெற்ற தீபம் ஒவ்வொரு மாதமும் அதன் தரத்தைக் காப்பாற்றி வளர்த்து வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அது பல புதிய அம்சங் களை வெளியிட முயன்றுள்ளது. இலக்கியத்துடன் சமூகப் பிரச்சி னைகளிலும் நாட்டின் நலனிலும் அக்கறை காட்டி வந்தது. சிறப்பான சிறுகதைகள், அருமையான குறுநாவல்கள், புதுமை செறிந்த தொடர் கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று இலக்கிய வடி வங்கள் பலவற்றிலும் நயமும் சுவையும் தரமும் நிறைந்த படைப்பு களை தொடர்ந்து வெளியிட்டது. ஆழ்ந்த, கனமான, சிந்தனைக் கட்டுரைகளையும், இலக்கியப் பிரச்சினைகள் சம்பந்தமான சர்ச்சைக ளையும் பிரசுரித்தது. புத்தக மதிப்புரைக்கு கணிசமான பக்கங்களை ஒதுக்கியது. அனைத்திலும் மேலாக, இலக்கிய வரலாற்று ரீதியான பல தொடர் கட்டுரைகளை விடாது வெளியிட்டு வந்தது. நேர் காணல் முறையில் பிரபல இலக்கிய ஆசிரியர்களின் கருத்துக்களையும், தொழிலதிபர் சந்திப்புகளையும் பிரசுரித்திருக்கி றது. குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களின் அனுபவங்களையும் குறிக் கோள்களையும் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் வெளியிட் - ليسا இதர இந்திய மொழிகளின் படைப்புகள் பலவற்றை - நாவல், குறுநாவல், சிறுகதை, கவிதைகளை - மொழிபெயர்த்து வெளியிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/37&oldid=923230" இலிருந்து மீள்விக்கப்பட்டது