வல்லிக்கண்ணன் 45 வரும் இதே காலத்தில் கவலையளிக்கும் வேறு காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. நிகழ்கால நிலைமையைப் பார்த்தால் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் கவலையளிப்பதாக இருக்குமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. வயதானவர்களிடையே பாராமுக மனப்பான்மை, இளைஞர்க ளிடையே விரக்தி, நடுத்தர வர்க்கத்தினரிடையே சினிமா மோகம், படித்தவர்களிடையே சகல துறைகளிலும் அவநம்பிக்கை என்றிருக் கிறது நிலைமை. தமிழ் இலக்கிய வளர்ச்சி - கடந்த காலத்துக்கு இணையாகப் புதுமைத் துறைகளில் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். பீடுபடுகிறோம். இலக்கியப் பிரக்ஞை உள்ள பத்திரிகைகளின் எண்ணிக்கையும் கூடியிருக்கிற காலம் இது. ஆனாலும் எதிர்காலம் கவலை தருவதா கவே இருக்கிறது. அரசியல், சினிமா என்ற இரண்டு பூதாகாரமான மனிதர்கள் க்யூவில் முன்னும் பின்னும் நசுக்க, நடுவில் இளைத்த இலக்கியவாதி பயனை அடைவதற்காகத் தான் நிற்கும் வரிசையிலிருந்து மெல்ல மெல்லப் பிதுங்கி வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான். சுதந்திரம் அடைந்த மற்ற நாடுகளில் முதலில் முன்னேற்றமும் பயனும் பெறுகிறவர்கள் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர் கள் போன்றவர்களாக இருப்பார்கள். இந்தியாவிலோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. எல்லா முன்னேற்றங்களையும் அரசியல் வாதிகளே அடைய, அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் ஆசிரியர்க ளும் பஞ்சைகளாக அலைகிறார்கள். அறிவாளிகளிடம் நியாயமான திறமையிருந்தும் அவர்கள் எந்தத் திறமையுமில்லாத ஒர் அரசியல் வாதியின் சிபாரிசை நாடி அலைய வேண்டியிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் நாட்டின் பொதுச் செல்வாக்கு அறிவாளி, விஞ்ஞானி, ஆசிரியர் ஆகியோருக்குச் சமமாக வர வேண்டும். செல்வாக்கும், காரியங்களைச் சாதிக்கும் திறனும் இருபத்து மூன் றாண்டு ஏகபோகமாக இன்னும் ஒரு சாராரிடமே இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
பக்கம்:தீபம் யுகம்.pdf/46
Appearance