பக்கம்:தீபம் யுகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தீபம் யுகம் இந்த நிலை மாறாத வரை இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் கவலையளிப்பதாகவே இருக்கும். இந்தக் கவலையளிக்கும் காலத் தில் தேசபக்தியுள்ள அறிவுத் துறையினர் சலிப்பாகவோ, சோர்வா கவோ இருப்பது பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும்." (தீபம் - மே 1970) - இந்த விதம் கவலை வளர்த்தாலும், நா. பா. விரக்தி அடைய வில்லை. நம்பிக்கை குன்றி விட வில்லை. தீபம் மூலம் நம்பிக்கை ஒளி பரப்புவதில் அவர் கருத்தாக இருந்தார். 'எல்லாப் புகழையும் வழிப்பறி செய்யும் பேராசைக்காரர்களும் அற்பர்களுமான அரசியல்வாதிகள் நிறைந்துவிட்டநாட்டில் அறிவா ளிகள் கொண்டாடப்பட மாட்டார்கள். நினைவு கூரப்படவும் மாட் டார்கள். இந்த உண்மை பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்டதென்றா லும், இளம் இலக்கிய அன்பர்களின் நாளைய உலகைப் பற்றி இன் னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆஷாடப்பூதித்தனங்களையும் போலிகளையும் தகர்த்து எறிந்து உண்மையான தொண்டனை கொண்டாட மறுக்காத காலம் வரும் என்று திட்டமாக நம்புகிறோம் நாம். அதற்காக இடையறாது உழைக்கவும் விரும்புகிறோம். (தீபம். அக்டோபர் 1970) என்று அவர் அறிவித்தார். .. பத்திரிகை ஒரு புனித இயக்கம் என்று வலியுறுத்தியது தீபம் தலையங்கம் எழுத்தாளர் சங்கம் ஆண்டு விழா பற்றி எழுதி, அங்கு ஒலிபரப்பான பேச்சுக்களை விமர்சித்தது. செம்மீன் - படைப்பிலக்கி யத்திலும் திரைப்பட நோக்கிலும் என்று ஆய்வு செய்தது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியை மதிப்பிட்டது. நமது விமர்சன வளர்ச்சி குறித் தும், சிந்தனை ஒருமைப்பாடு பற்றியும், தமிழ்ப் புத்தக விற்பனை பற்றியும் தலையங்கம் வெளியிட்டுள்ளது தீபம். . இலக்கியப் பத்திரிகை என்ற தன்மையில் 'தீபம் இலக்கிய உலகம் பற்றி பல்வேறு கோணங்களிலும் கூரிய பார்வையைச் செலுத்தி ஆழ்ந்த கருத்துக்களை ஒலிபரப்பியது. ஆண்டுதோறும் ஆகஸ்டில் சுதந்திரதினம் பற்றியும், செப்டம்பரில் பாரதி விழா குறித் தும், அக்டோபரில் காந்திஜீ பற்றியும் வித்தியாசமான ஒவ்வொரு வருடமும் புதிய சிந்தனை ஒளியுடன் தலையங்கம் வரைந்தார் நா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/47&oldid=923241" இலிருந்து மீள்விக்கப்பட்டது