சாதனை படைத்த சிறு பத்திரிகைகளின் வரலாறு எழுதப்பட வேண்டியது அவசியம்.
இந்த வகையில், இலக்கிய உலகில் , தனிச்சிறப்புடன் விளங்கிய மணிக்கொடி, சரஸ்வதி ஆகிய இதழ்களின் வரலாறுகளை எழுதச்செய்து 'தீபம்' இலக்கிய இதழில் பிரசுரித்தார் நா.பா.
கால ஓட்டத்தில் 'தீபம்' இதழே வரலாறு ஆகிவிட்டது. தமிழ் இலக்கியத்தில் சாதனைகள் புரிந்துள்ள நா.பா.வும் அமரரானார். 'தீபம்' இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த இலக்கிய நண்பர், ஞானியார் அடிகள் மன்றம் பாலகிருஷ்ணன் நா.பா.விடம் மிகுந்த அன்பும் நட்பு உணர்வும் தீபத்திடம் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். அவர் சிரமங்களை பொருட்படுத்தாது, சொந்தப் பொறுப்பில் ஆண்டுதோறும், நா.பா.வுக்கு அஞ்சலி நடத்தி வருகிறார். வருடம் தோறும் இப்படி ஒருநாள் கூடி நா.பா.வை நினைவுகூர்ந்து ஆத்மார்த்தமாகப் பேசிச் செல்வதோடு நின்றுவிடாமல் நா.பா.வின் நினைவை அழுத்தமாகப் பதிவு செய்யும் நினைவு நூல் ஒன்றை தொகுத்து வெளியிட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் விரும்பினார்.
நண்பர்கள் நா.பா.பற்றி நினைவுகூர்ந்து, அவரவர் அனுபவங்களைக் கூறும் தொகுப்பு நூலை விட, நா.பா.ஒரு தவமாக