உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துணிந்தவன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 11 காந்தி, உன் அப்பாவும் அம்மாவும் நிச்சயம் செய்துள்ள இடம் பெரிய இடம், பணமும் அந்தஸ்தும் நிறைந்தவர்கள்....” கைகளால் தன் காதுகளைப் பொத்திக்கொண்ட காந்திமதி அலுப்புடன் சொன்னாள். 'போதும் போதும். நீங்கள் ஒன்றும் வர்ணிக்கவேண்டாம்....' மாதவன் தொடர்ந்து கூறினான்: 'நான் எப்படி வாழப்போகிறேன். என்ன ஆவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். என் வாழ்க்கைப் பாதை, பசும்புல் மெத்தென அமைந்த சமநிலத்தில் செல்லப் போவதில்லை. செங்குத்தான பாறைகள்மீதும், கிடுகிடு பள்ளங்களிலும், வழுக்குப் பிரதேசங்களிலும் செல்ல்க் கூடும்...." 'எங்கு போனாலும், எப்படி ஆயினும் நானும் உங்கள் நிழல்போல உங்கள் கூடவே வரத்தயாராக இருக்கிறேன். இன்றே இப்பொழுதே உங்கள் பின்னால் நான் வந்து விடுகிறேன்; அத்தான், என்னைக் கைவிட்டு விடாதீர்கள்' என்று கெஞ்சினாள் அவள். மாதவன் உறுதியாகத் தலை அசைத்தான்: காந்தி, நான் உனக்குக் கேடு நினைக்க மாட்டேன். உன்னைப் போன்ற உத்தமப் பெண்ணோடு வாழ்ந்து சுகம் பெறும் பாக்கியம் செய்தவனில்லை நான். என்னோடு வாழத் துணிந்தாலும், நீ சுகம் பெறமாட்டாய். உன் வாழ்வை நீயே பாழாக்கிக் கொள்வதோடு, என்னையும் செயலற்றவ னாக்கி விடுவாய். எனது புதிய திட்டத்தை வெற்றிகர மாக்குவதற்கு....” நான் உங்கள் இஷ்டம் போல் துணை புரிவேன், என்னை நம்புங்கள்' என்று அழாக்குறையாக அறிவித்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/23&oldid=923494" இலிருந்து மீள்விக்கப்பட்டது