உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) லேயே தமது மனத்தை வைப்பர்; அடியார்க்கு அடியா ராய்த் தொண்டுபுரிவர் ; நரிபோன்றி வஞ்சகநினைவு இல்லா மல் நாள்தோறும் தியானித்துப், பிரியாத அன்பினராய்ப் பெருமானே இறைஞ்சுவர் ; பண் விளங்க இன்னிசை பல நாளும் பாடி ஆடுவர்; அடியார்க்குரியe"பத்து இலக்கணங்க ளுடனும் விளங்குவர் ; பரசிவத்தையே பணியும் சிந்தைய ராய் விளங்குவர்; நன்மை பெற்றபோதும், பெருதபோதும் இறைவன் திருவடியை விரும்பிப், பிற பற்று ஒன்றும் இன்றி, இறைஞ்சுவர் ; பொய்யா நாக்கொண்டு இறைவனைப் புகழ்வர் ; மனம்போன போக்கை விலக்கிப் பெருமானிடம் அன்புகொள்வர் ; அன்புடனே இறைவன் திருவடிக்குப் பணிபுரிவர். கலைபயின்ற அந்தணர்கள் சொல்லும் பொருளும் சிறப்புடன் அமைந்த நான்கு வேதங்களையும் பல தோத்தி ரங்களையும் சொல்லித் துதித்து இறைஞ்சுவர் ; அத்தகைய அதிகளைக் கற்பாரும் கேட்பாருமாய்த் திகழ்வர். (2) சுந்தாரின் தேவாரத்தை ஒதும் அடியார்கள் [4(1),(2)] (தலைப்பு 127 பார்க்க) ஆரூரர் அருளிய இசைகிறைந்த பாடல்களைப் பொய். யிலாச் சிங்தையுடன் அடியார்கள் உவப்புடன் பாடிப் புலம்புவர் ; அவை தமை மலர்கொண்டு பூசித்து ஒதுவர்; (8) பாடும் அடியார்கள் (4(3)) அடியார்கள் சந்தம் பலவும் பாடுவர் ; பாடிப் பரவித் திரிவர் ; பண் நிறைந்த இன்னிசையுடன் பலநாளும் பாவித்துப் பாடி ஆடுவர். 1, கண்டம் கழுதழுத்தல். 2.நா அசைதல். 8. இதழ் துடித்தல். 4. நஇக்கமுறல். 5. மயிர்பொடித்தல். 6. அங்கம் வெதும்பி வியர்த்தல். 7 தள்ளாடி_வீழ்தல், 8. கண்ணிர் பிலிம்றல், 9. கலுழ்ந்து இரங்கல். 10. ஆர்வத்தால் பாவசப் படுதல். L T * - =