இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயற்கை:
தொடுவானம்
பியாக் ஆதி
எடுப்பு
தொடுவான் அழகே அழகு!
விடியல் தந்த
தொடுவான் அழகே அழகு!
மேல் எடுப்பு
நெடுமரச் சாலையில் புள்ளிசை மீட்டிடும்!
நிரலை கரைமோதி முழவொலி கூட்டிடும்!
அமைதி
மாவின் பசுந்தளிர்கள் பனித்துளி தூவிடும்!
மலர்கள் மணம்பரப்பி உயிர்களைக் கூவிடு!
பூவின் மதுநுகர்ந்து பொறிவண்டு பாடிடும்!
புதர்கள் தலை அசைத்துப் புன்சிரிப் பூட்டிடும்!
கூவிச் சிறகடித்து வரிச்சேவல் எழுப்பிடும்!
கொடுமை இருளகல ஒளிஎங்கும் தாவிடும்!
5