இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காலை அழகு
சாவேரி
ஆதி
எடுப்பு
காலை அழகைச் சற்றுக் கண்டாலே-மனக் கவலை பறந்தோடும் தன்னுலே !
மேல் எடுப்பு
வேலிப் புதுமலர் மிகுமணம் வீசிடும்!மெல்யாழ் விருந்தினைத் தேன்வண்டு தந்திடும் !
அமைதி
கூட்டி லிருந்து சின்னக் குருவிகள் பாடிடும்!
குதித்துக் குதித்து வெள்ளி கீழ்வானில் தாவிடும்!
வீட்டினுள் சேவலோ விடியலை வாழ்த்திடும் !
மெல்ல இருள்நழுவக் கீழ்த்திசை வெளுத்திடும் !
தொடுவானில் செவ்வண்ணக் தொட்டி உருண்டிடும்!
தோப்பு வயல்க ளெங்கும் பொன்மழை தூறிடும்
கடமை மறந்திடாப் பரிதியோ கீழ்வானில்
கரகர வெனச்சுற்றிச் சிறுநகை பூத்திடும் !
6