பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் 37

'மூக்கு வாய்செவி கண் உடல் ஆகிவந் தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்கு வான் நமை நோய் வினே வராமே காக்கும் நாயகன் கச்சிஏ கம்பனே' :பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை பெண்ணுெ டாண் என்று பேசற் இரியவன் வண்ணம் இல்லி வடிவுவே ருயவன் கண்ணில் உள்மணி கச்சிஏ கம்பனே'

ஒருவ னுய் உணர் வாய் உணர் வல்லதோர் கருவுள் நாயகன் கச்சிஏ கம்பனே’’ என்னும் குறுந்தொகைகளில் மேலே கூறிய உண்மை ஆயினை உணர்க.

இக்கச்சிப்பதிகத் திருக்குறுந்தொகையில் இராவ ணன் ஏகம்பனை நினைந்தே உய்ந்தனன் என்னும் குறிப்பை அழகுற நம் அப்பர் பெருமானுர்,

'இலங்கை வேந்தன்இ ராவணன் சென்றுதன் விலங்க லேஎடுக் கவ்விரல் ஊன்றலும் கலங்கிக் கச்சிஏ கம்பவோ என்றலும் நலம்கொள் செலவளித் தான்.எங்கள் நாதனே' என்று உணர்த்தியுள்ளனர்.

கச்சியம்பதியைப் பற்றிய இரண்டாவது திருக் குறுந்தொகைப் பதிகத்திலும் நெஞ்சிற்கு அறிவுறுத் தும் பாடல் ஒன்றும், உபதேச முறையில் அமைந்த பாடல்கள் எட்டும் உள்ளன. முதல் பாடல் இறை வனே நோக்கி, 'கச்சி ஏகம்ப ! அடியவர்களாகிய நாங்கள் துன்பம்படுதல் கூடுமா?" என்று வினவி,

ஐவர் - மூக்கு, வாய், காது, கண், உடம்பு ஆகிய ஐவர். வண்ணம் - தனக்கென அமைந்த ஒரு நிறம். பண் - பாட்டு

விலங்கல் - கைலைமலை. செலவு - மீட்சி.