பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆசிரியர் முன்னுரை திருநாவுக்கரசர் தம் அருள் வாக்கில்,

"கால்களால் பயன்என் கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன்என்"

என்று அறிவுறுத்தி இருப்பதை உற்று நோக்கும்போது, இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைக் கட்டாயமாகச் சென்று வணங்க வேண்டும் என்பது உறுதியாகிறதன்ரோ? அங்ஙனம் செல்ல அவாவுடைய அன்பர்களுக்குத் துணைக் கருவியாக ஒரு நூல் இருக்கவேண்டும் என்னும் கருத்துக் கொண்டே தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சில தலங்கள் என்னும் பெயரில் இது வெளிவருவதாயிற்று.

தொண்டை நாட்டில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்களால் பாடப் பெற்ற தலங்கள் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் முதல், திருவிரும்பை மாகாளம் கோவில் ஈருக முப்பத்திரண்டாகும். தொண்டை நாட்டில் முப்பத்திரண்டு தலங்கள்தாம் உள்ளனவோ என்று எண்ணவேண்டா. நூற்றுக் கணக்கான திருக்கோயில்கள் உண்டு. ஆளுல், பாடல்பேற்ற திருக் கோயில்கட்குத் தனிப் பெருமை இருத்தலாலும், மக்களுக்கும் அத் திருக்கோயில்கட்கே சென்று வணங்கவேண்டு மென்னும் அவா எழுவதனாலும் அம் முப்பத்திரண்டு திருக் கோயில்களைப் பற்றிய வரலாறுகளும், ஆரிய குறிப்புகளுமே இந் நூலில் எழுதப்பட்டுள்ளன. இறைவரின் திருவருள் கூட்டி வைக்குமேல் ஏனேய நாட்டுப் பாடல் பெற்ற தல, வரலாறுகளும் இம் முறையில் வெளிவரக்கூடும். --

இங்கு எடுத்து எழுதப்பட்ட தலங்கள் முழுமுதற் பரம் பொருளாம் முக்கண் மூர்த்தியின் தலங்களைப் பற்றியே என்னாலும், முப்பத்திரண்டு தலங்களுள் ஒரு தலத்தைப்பந்திய வரலாற்றை எழுதும்போது, அத் தலத்திற்கு அண்மையில் திருமால் தலமோ, முருகன் கோயிலோ இருக்குமானால் அத் தலங்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் சிறிது எழுதப் பட்டுள்ளன. .