பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

முருகப் பெருமான் தனிச் சிறப்புடன் எழுந்தருளியுள்ள தலங்களைப்பற்றி எழுதிய தோடன்றி, அவ்வத் தலத்தில் அருணகிரிநாதர் பாடியுள்ள திருப்புகழும், தொண்டை நாட்டுச் சிவ தலங்களில் எழுந்தருளியுள்ள அப் பெருமான் மீது பாடி இருக்கும் திருப்புகழும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் வெறும் தலங்களைப் பற்றிய வரலாறுகளும், குறிப்புகளும் மட்டும் எழுதப் படவில்லை. இத்தலங்களை அடைதற்குரிய வழி வகைகள் என்ன ? இத்தலத்தின் வரலாறு யாது? இத் தலங்களைப் பற்றி யார் யார் பாடியுள்ள னர்?' என்பன போன்ற பல அரிய விளுக்களுக்குரிய விடைகன் எழுதப்பட்டுள்ளன அவ்வப்பதிகங்களில் இருந்து சில பாடல் களும் முழுவடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குரிய அருஞ்சொற் பொருளும் தரப்பட்டுள்ளது. அவ்வத் தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவரை நால்வரின் பாடல் கனே க் கொண்டே துதிப்பதற்கு இவை பெருந் துணையாக அமையும் அல்லவே !

இந்த அமைப்புகளுடன் இன்றி ஒவ்வொரு தலத்தின் மீது பாடப்பட்ட பதிகங்கள் எத்தனே உண்டோ, ஆத்தனே பதிகங்களில் அமைந்த அரும்பெரும் கருத்துகளும் எடுத்து எழுதப்பட்டுள்ளன. இங்ங்க மெல்லாம் எழுதப்பட்டுள்ளதன் மூலம், அவ்வத் தலங்களின் இயற்கை அழகு, வளன், இலக் கியநயம், இறைவன் திருப்பெயர், இறைவியின் திசூப்பெயர், அவ்வருளாளர்கள் மக்களுக்குச் செய்துள்ள அரிய உபதே சங்கள் தம்தம் நெஞ்சிற்கு அறிவுறுத்திய அறவுரைகள், அகப் பொருள்சுவை தழுவிய பாடல்கள் முதலானவற்றை நன்கு உணர்ந்து கொள்ளலாம். மேலும், நான்கு சைவ சமயr சாரியர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்றவைகளும் அகச் சான்றுடன் இதில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

இன்னுேரன்ன அரும்பெரும் அமைப்புகளுடன் வெளி வரும் இந்நூலே பொதுமக்களும், சிறப்பாகச் சைவ அன்பtகளும் வாங்கிப்படித்துப் பயன்படுத்தி அடியேனே ஏனைய தலங்களைப் பற்றியும் எழுத ஆக்கமும், ஊக்கமும் அளிக்க அவர்களே அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இதில் எடுத்து எழுதப்பட்ட தலங்களின் கல் வெட்டுகளால் நாம் என்னென்ன அறிகின்ருேம் என்று